29views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
நின்று நின்று எரிந்தன அன்று காசாவும் சுற்றுப்புறங்களும்…
நாசாவும் நாசத்தின் தூதர்களுமாக வைத்த நெருப்பில்…
உயர்ந்த மேடுகளும்
பக்கத்துக் காடுகளும்
மக்கள் வீடுகளும்….
மிஞ்சியதெல்லாம்
மனிதக் கூடுகளும்
பிள்ளைகள் பெண்கள் சாம்பலும் …
யார் என்று தெரிந்தும்
எதுவும் செய்ய முடியவில்லை எங்களால்
செய்ய முடிந்தவர்களும்
செய்ய முடியவில்லை
கைகட்டி நா கட்டிய சூழ்ச்சிகளால் …
எல்லாம் இழந்தும்
இழக்காமல் இருந்தது ,
பாலஸ்தீனியரின் நம்பிக்கை நெருப்பு மட்டும்தான்…
எவ்வளவு செய்தும் அதனை
இம்மியும் இளகச் செய்ய முடியவில்லை …
உங்கள் போர் குண்டுகளும் ஏவுகணைகளும்
நீர்த்த குண்டுகளாய் அங்கே மரித்துப்போயின…
தர்மத்தின் வாழ்வதனை சூதால் கவ்வி
நீர் கவ்வி..
நிலம் கவ்வி …
வாழ்க்கை கவ்வி…
அவர்களை
வாழ்விழக்க வைத்தீர்கள்…
அன்றைய அப்ரஹாவை அழித்த
அபாபீல் பறவைகள் குர்ஆன் சரிதைகளில்.
நடக்க முடியாது என்று உலகமே நம்பி இருந்த
அந்தப் பறவைகளில் ஒன்றை
அன்று ஓர் அரபி காட்டினார்… உலகம் பார்த்தது…
அது கற்களைக் கொண்டு போட்டு
யானைகளைக் கூழாங்கல் போல் ஆக்கியதாம் …
நெருப்பு வைக்குமா என்று தெரியாது …
ஆனால் இன்று
பற்றக் கூடாத
இடங்களில் எல்லாம்
நெருப்பு பற்றுகிறது…
எரிக்கக்கூடாத இடங்களை எல்லாம் எரிக்கிறது…
லாஸ் ஆகாதவை எல்லாம்
லாஸ் ஆகிறது …
லூசாகக் கூடாதவை எல்லாம் லூசாகிறது…
இது ஒரு விந்தைதான்…
நரகம் யார் கையில் என்று சரித்திரம் காட்டுகிறது…
யாரும் எரிவதிலோ
எவரையும் எரிப்பதிலோ
எங்களுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லைதான்…
ஆனாலும் சரித்திரம் இன்னொரு வகையில் மீண்டும் திரும்புகிறது …
தர்மத்தின் வாழ்வை தண்டித்தால்
சூது மட்டுமல்ல
அவர்களை தீயும் கவ்வும் என்று உலகுக்குத் தெரிகிறது …
இதுவும்
ஒரு பாடம் தான்…
add a comment