உலகம்

துபாயில் நடந்த உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள்

136views
துபாய் :
துபாயில் விளையாட்டு கவுன்சில் அனுமதியுடன் உலக களரி கூட்டமைப்பு, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள் நடந்தது. ராஷிதியா பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார்.
இந்த போட்டிகளை துபாய் போலீஸ் உயர் அதிகாரி ஒமர் அல் மர்சூகி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக உம் அல் குவைன் ஆட்சியாளர் குடும்பத்தை சேர்ந்த ஷேக் அலி பின் அப்துல்லா அல் முல்லா மற்றும் சர்வதேச அறிஞர்கள் குழுவின் இயக்குனர் ஆலியா ஷேக் அல் கிண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியா, அமீரகம், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து 110 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.  போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.  களரி, சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் சிறந்த பயிற்சி மையமாக அபுதாபி பிட் பிரேவ் அகாடமி தேர்வு செய்யப்பட்டது.  அந்த மையத்தின் நிறுவனர் டாக்டர் தீபிகா மற்றும் பயிற்சியாளர் பரத் குமார் ஆகியோர் வெற்றிக் கோப்பையை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உலக களரி கூட்டமைப்பின் நிர்வாகிகள் பரத், ரமேஷ் அனுராதா, அடாப்ட் விளையாட்டு அகாடமியின் டேவிட், டீபா கூட்டமைப்பின் கால்டுவெல், மணிகண்டன் மற்றும் டாக்டர் ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!