25
குப்பைக் கூளங்கள் விடுத்து
மனக் குப்பைகள் எரி…
அறிவு வளர்த்து
அறியாமை எடுத்தெறி… எடுத்தெரி…
நற்பண்பு மிகக் கொள்
நச்சுகள் கொளுத்து…
நாகரிகம் பேணு
அநாகரிகம் அறு…
திராவிடம் போற்று
வீரத் தமிழனாய்
உயர்ந்து நில்…
நேரியம் காத்தல் செய்
ஆரியம் அச்சம் கொள விடு…
வர்ணாசிரமச்
சாத்திரப் பகைவெல்-மாட்டு
மூத்திரச் சாணியில்
இயற்கை உரம் செய்…
உழைப்புப் பேணுக…
உழவைப் பேணுக…
உழவரைப் போற்றுக…
இயற்கைப் பேணுக..
ஏறு தழுவுக…
வீரம் போற்றி வாழ்க…
இது நம் தமிழன் விழா…
ஒளிந்திருந்து பார்க்கும் மேநூல்
ஐயனுக் கில்லை…
வட நாட்டுப்
பையனுக்கில்லை…
தமிழ் நாடா எனக்கேட்கும்
பொய்யனுக்கும் இல்லை…
நமக்கானதா என்று
கீழ் நோக்கும் ஐயனுக்கும் இல்லை…
துணிந்து நில்…
தீயோர்ப் பகை வெல்…
வெற்றி நமதென்று சொல்….
பழையன போக்கு…
புதியன ஆக்கு…
சுற்றுச்சூழல் கருக்கும்
நெருப்புக் குதவாமல்
மண்ணுக்குள் போட்டு
நீர்த்திடச் செய்…
அது இன்னும் நன்று…
பழைய போக்கி
இன்று வந்தது
யோகிக்கும் போகிக்குமில்லா
புதிய போகி…
நாளை நமதென்று சொல்…
புதுப்பானை வைத்து
புதுச்சோறு பொங்கி பொங்கலோ பொங்கல் என்று
தமிழ் புத்தாண்டும் கொண்டாடு…
நல் வாழ்த்துகள்…
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment