தமிழகம்

காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் !!

65views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் பகுதியை சேர்ந்த விட்டல் குமார்(42) பிஜேபியின் ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார்.  இவர் நாகல் பஞ்சாயத்து முறைகேடுகளை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவந்தார்.
திமுகவை சேர்ந்த நாகல் பஞ்சாயத்து தலைவர் பாலா சேட் (54) உத்தரவின்பேரில் இவரது மகன் சந்தோஷ்குமார்(26) தரணிகுமார்(28) கமல்தாசன் (24) ஆகிய 4 பேரும் சேர்ந்து விட்டல் குமாரை கொலை செய்தனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். கொலையில் தொடர்புடைய இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!