தமிழகம்

தேனி மு. சுப்பிரமணிக்கு சிங்காரவேலர் விருது!

85views
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று (7-1-2025) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறை விருது வழங்கும் விழாவில் எனக்கு, ”2023 ஆம் ஆண்டுக்கான சிங்காரவேலர் விருது” வழங்கப் பெற்றது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் எனக்கு பொன்னாடை மற்றும் ஒரு சவரன் அளவிலான தங்கப்பதக்கம் அணிவித்து, சிங்காரவேலர் விருதுக்கான தகுதியுரை மற்றும் விருதுத்தொகை இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கிப் பாராட்டினார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் வே. ராஜாராமன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
2018 ஆம் ஆண்டு முதல் தமிழில் அறிவியல் கருத்துகளை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவக் கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு வழங்கப்படும் சிங்காரவேலர் விருதுக்கு தேர்வு செய்த மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார் திரு.தேனி மு. சுப்பிரமணி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!