தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சர்வர் அறைக்கு அமலாக்கத்துறை சீல் !! சென்னை உயர் நீதிமன்றத்தில் சீலை அகற்றகோரி மனு !!!

49views
வேலூர் அடுத்த காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனின் வீடு, மகன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி சில ஆவணங்களை எடுத்து சென்றனர். கல்லூரியில் மட்டும் தொடர்ந்து 2 நாட்கள் ரெய்டு நடத்தினர்.
கதிர்ஆனந்த்நடத்தும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கு துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய முயன்றபோது கல்லூரியின் கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த சாப்ட்வேர் ஒத்துழைக்கவில்லை. கல்லூரி ஊழியர்கள் மட்டும் பயன்படுத்தும் விதமாக கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன.  பல மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்தது.பின்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மீண்டும் சோதனை செய்ய நேற்று முன்தினம் (7-ம் தேதி)5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து அதிகாரிகள் சர்வர் சீல் வைத்த இடத்தையும் மற்றும் அலுவலக அறைகளை சோதனை செய்ததாக தகவல்கள் கசிந்தன. இரவு வரை சோதனை நடந்ததாக தெரிகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், அலுவலக பணிகள் நிற்பதாகவும்  சீல் வைக்கப்பட்ட அறையை திறக்க கோரிகல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுவை நீதிமன்றம் நாளை 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!