தமிழகம்

பரமக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றப் பேரவை கூட்டம்.

71views
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இராமநாதபுரம் மாவட்டப் பேரவை கூட்டம் எழுத்தாளர் உரப்புளி நா ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.   நீ சு பெருமாள்,ராசி என் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகர் செயலாளர் கே ஆர் ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நான்காம் வகுப்பு பயிலும் கவின் நிலாவின்  பரதநாட்டியத்துடன் பேரவை தொடங்கப்பட்டது.   தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் த அறம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மனித நேயம் மிக்கவர்கள், சாதி மத இன பாகுபாடில்லாமல் சமமாகப் பார்ப்பவர்கள், முற்போக்கு எண்ணம் உடையவர்கள், மக்களிடையே மூடநம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையை விதைக்க நினைப்பவர்கள், கலை கலைக்காக அல்ல ,கலை மக்களுக்காக என்கிற எண்ணம் கொண்ட படைப்பாளிகள் வரை இதில் உறுப்பினராகச் சேர்ந்து பயணிக்கலாம் .
இராமநாதபுரம் மாவட்டம் நிச்சயமாக கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர்கள். படைப்பாளர்கள் மிகுந்த மிகுந்த மாவட்டம் இது என்பதால் நீங்கள் இதனை சாத்தியமாக்குவீர்கள் என்று நம்புகிறேன் என தன்னுடைய உரையின்போது மாநிலச் செயலாளர் த அறம் அவர்கள் குறிப்பிட்டார்.
 சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ ஆர் சாந்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
திரு வி க விருதுக்கு மிகப் பொருத்தமான வகையில் டாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு  திரு வி க விருது வழங்கி பெருமை சேர்த்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர்கள்  என்கிற வகையில் உரப்புளி நா ஜெயராமன், நீ சு பெருமாள், கவிஞர் மானுடப் பிரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.   பரமக்குடி நகருக்கு கே ஆர் ரவிந்திரன், பி இராமசாமி, வி ரமேஷ்பாபு, ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  ராமநாதபுரம் நகருக்கு எஸ் சௌந்தர பாண்டியன், பேராசிரியர் பாலமுருகன், ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் நகரில் பெருமன்றக்கிளை அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கவிஞர் முகவை முனீஸ் அவர்கள் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். அனைத்து கிளைகளிலும் கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர் பதிவை நிறைவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.  மகாகவி பாரதியின் ஆய்வாளர் இரா மோகன் எழுச்சிமிக்க வகையில் பாரதியின் பாடலைப் பாடி வாழ்த்துரையினை நிறைவு செய்தார்.

கவிஞர் நாகஜோதி,பழனியாண்டி,வழக்கறிஞர் பி பசுமலை,கவிஞர் மானுடப்பிரியன் என் கே ராஜன்,Dr சோலைமலை வரதராஜன்,கே ஆர் சுப்பிரமணியன்,எஸ் சௌந்தரபாண்டியன்,பி ராமசாமி,சி செல்வராஜ்,பேராசியர்,வி பாலமுருகன்,வி ரமேஷ்பாபு,பி ஆர் அமர்நாத், உள்ளிட்டோர் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!