தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், எம்.பி.கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு !! ஆவணங்கள் சிக்கியது??

155views
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் மகன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் 3-ம் தேதி காலை 20 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் திடீரென வீட்டில் ரெய்டு செய்யவந்தனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அமைச்சர் துரைமுருகன் குடும்பத்துடன் சென்னையிலும், கதிர் ஆனந்த் குடும்பத்தினருடன் துபாயில் இருந்தனர்.
வீட்டின் சாவி இல்லாத காரணத்தால் துபாயில் உள்ள கதிர் ஆனந்திடம் இ-மெயில் மூலம் அனுமதி பெற்று மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து ரெய்டை துவக்கினர். பாதுகாப்புக்காக சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுப்பட்டனர்.  அதேப்போல் அமைச்சரின் பினாமியான பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ள பள்ளிகுப்பம் வீட்டிலும், சிமெண்ட் குடோனிலும் அதிரடி சோதனை நடந்தது.  கதிர் ஆனந்திற்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் நடந்தது.

2019-ல் கதிர் ஆனந்த், பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்பு பணத்தை அப்போது கைப்பற்றனர். அதன் வழக்கு தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வருமானவரித்துறை ரெய்டு நடைபெறுகிறது.  சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணி ஈடுப்பட்டு உள்ளதால் திமுகவினர் பெட்டி பாம்புபோல் சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.  3 இடங்களில் சில ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது..??
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!