தமிழகம்

திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை

32views
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் ( முனைவர். பத்மநாபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது ) தலைமையில் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தொடர்ந்து 24 – வருடங்களாக ஜனவரி 1-ஆம் தேதி திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது . பூம்புகார் படகு போக்குவரத்து பெருங்காற்றின் நிமித்தமாக நடைபெறாததால் பூம்புகார் கப்பல் துறையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்திற்கு கலந்து கொண்ட அனைத்து தமிழ் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமான் எம் .ஆர் .காந்தி அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு & திருமதி ஹெலன் டேவிட்சன் அவர்களும் தென்குமரி கல்விக்கழக செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்களும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் ,சமூக சேவகர் தலைமை வகித்தார். தமிழ் அறிஞர் மருத்துவர். சிதம்பர நடராஜன், புலவர். ராமசாமி ,புலவர். சிவதானு தேரூர் ,தமிழ் தமிழ் முதுகலை ஆசிரியர் பா,இளங்கோ , தொழில் சங்க தலைவருமான இளங்கோ ,கருங்கல் கி.கண்ணன் ,திருநைனார் குறிச்சி இரத்தினதாஸ், பாஸ்கல், பாலசுப்பிரமணியம், இராஜமணி, ஓவியர் கொட்டார கோபால் ,மு. ஞானமூர்த்தி, திருமதி, ஷர்மிளா ஏஞ்சல், சர்ச்சிலா பர்வீன், சங்கர், செல்வகுமார் ,அந்தோணி, வழக்கறிஞர். சத்தியலினோ, ராஜசேகரன் ,ஜாக்சன் ரொட்டேரியன் செல்வகுமார், தங்க ஆதிலிங்கம், ஞானமூர்த்தி மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சான்றோர்களும் திருவள்ளுவருக்கு மரியாதை செய்து சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!