தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு !!

48views
வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாநிலபொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் பி.பாஸ்கர் தலைமையில் நடந்தது.  சிறப்பு அழைப்பாளராக மாநில கௌரவத் தலைவர் சி.ராஜவேலு பங்கேற்றார். மாவட்ட தலைவர் டி.கே.ரமேஷ்,மாநில பொதுச்செயலாளர் பி.பாலாஜி சிங் , சட்ட ஆலோசகர் ஜி.பிரபாகர், மாநில இணை செயலாளர் வி.ஸ்ரீதர், மாநில பொருளாளர் ஏ.மணி, மாவட்ட செயலாளர் நந்தகுமார், தோட்டக்கலைப்பண்ணைப் பணியாளர் சங்கத்தினர், அனைத்துமாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தத்தை தமிழக அரசு செய்ய வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், தோட்டக்கலைப்பண்ணைகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததினக் கூலி பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும், தமிழக முதல்வர், தமிழகத்திலுள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகி ஜெயபால் நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!