தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தம்மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திவைத்திருந்த சொகுசு பேரூந்து திருட்டு!!

60views
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சில தினங்களாக சுற்றுலா சொகுசு பஸ் ஒன்று பைக்கிற்கான போலி பதிவெண்ணுடன் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதாக சென்னை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்திற்கு புகார் சென்றது.  இதனையெடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் வாகன கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.
குடியாத்தம் வாகனமோட்டார் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே சோதனை செய்துகொண்டு இருந்தபோது வேலூரிலிருந்து பள்ளி கொண்டா நோக்கி வந்த ஒரு சொகுசு பேருந்தை நிறுத்த முயன்றும் அது நிற்காமல் சென்றது.. உடனே போக்குவரத்து அதிகாரிகள் ஜீப்பில் விரட்டி சென்று பிடித்து சோதனை செய்ததில் ஆந்திர மாநில பேரூந்து என்றும் எண் போலீயானது என்பது கண்டுபிடித்து பேரூந்தை பறிமுதல் செய்து குடியாத்தம்மோட்டார் வாகன அலுவலகம் எதிரில் நிறுத்தி இருந்த நிலையில் நேற்று விடியற்காலை பேரூந்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.  இதுகுறித்து குடியாத்தம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின்பேரில் ஒருவனை பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!