65
அஞ்சுகிராமத்தை அடுத்த லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா கல்லூரியின் இணை இயக்குனர் முனைவர் ஐயப்பா கார்த்திக் அவர்களின் முன்னிலையில் கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமூக சேவகர்- பசுமை நாயகன் மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்த போராடிய முதல் தேசிய போராளி ) கலந்து கொண்டார் .இதற்கான ஏற்பாடுகளை முதன்மை நிர்வாக அதிகாரி பொறியாளர் ஜே பி. ரெனின், முதல்வர் முனைவர் நியூலின் செய்திருந்தார். விழாவுக்கான இதர பணிகளை ஆசிரியைகள் சில்பா, ஜர்லா செய்திருந்தனர். பல்வேறு மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டலும் செய்யப்பட்டது. இயக்குனர் ஸ்ரீமான் கிருஷ்ணபிள்ளை அவர்களின் உத்தரவின் படி தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு பரிமாறப்பட்டன.
நாகர்கோவில் மருத்துவமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிஷப்