தமிழகம்

இயேசுபெருமான் பிறந்த நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம் : தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

16views
அன்பும் அறமும் அநீதியை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்கள் என்பதை அமைதி வழியில் போதித்தவர் இயேசு பிரான். இயேசு பிரான் போதித்த அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஏழைகளுக்கும் – அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி, கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் ஒரு மாபெரும் மனித நேயத் திருவிழா. மகிழ்ச்சிக்குரிய இந்தப் பெருவிழாவினை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
நாட்டு மக்களிடையே அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை உலகிற்கு தந்த இயேசு கிறிஸ்துவின் வழியில் பயனிக்கிற கிறிஸ்துவ பெருமக்கள், அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடந்திடும் நல்லரசுகள் மத்தியில் ஏற்பட இயேசு கிறிஸ்து அருள் பாலிக்கட்டும்.
உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். இயேசுபெருமான் பிறந்த நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம் . அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு தேசிய முன்னேற்றக் கழகம் சார்பில் மற்றொரு முறை கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!