தமிழகம்

கன்னியாகுமரியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாலோசனை கூட்டம்

123views
முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கலெக்டர் அழகுமீனா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிவிழா நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழ் அறிஞர்களிடமும் தமிழ் ஆர்வலர்களிடமும் காணொளி வாயிலாக எடுத்துரைத்தார். இதில் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். பல அறிஞர்கள் தம் கருத்துக்களை தெரிவித்தனர் அதற்கு கலெக்டர் அழகுமீனா அவர்கள் பரிசீலனை செய்வதாக கூறினார்.
கன்னியாகுமரி பண்பாட்டு ஆய்வு மைய பொதுச் செயலாளர் மற்றும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் காணொளி மூலம் பேசுகையில் கன்னியாகுமரியில் திருநைனார்குறிச்சியில் பிறந்த திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யும் விதமாக திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை கொண்டாடுகின்ற தமிழக அரசையும் முதல்வரையும் பாராட்டி வணங்குகிறோம். அதுபோல பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை செய்கின்ற ஆட்சியர் அழகுமீனா அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கலந்து கொண்ட அனைத்து சான்றோர்கள் சார்பாகவும் தன் சார்பாகவும் பொன்னாடையை தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கனக லட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தார்.

விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு தனி அமர்வு ஏற்பாடு செய்யவும், விழா மேடையில் தமிழ் அறிஞர்களுக்கு பங்களிப்பு அளிக்கவும் ,தொடர்ந்து திருவள்ளுவரின் கொள்கை பிடிப்போடு தமிழ் பணி செய்கின்ற அறிஞர்களை கௌரவிக்கவும், கன்னியாகுமரியில் இருந்து திருநைனார் குறிச்சி வரை பேருந்து வசதி செய்திடவும், கன்னியாகுமரியில் உள்ள கவிமணி பேருந்து நிலையத்தில் திருவள்ளுவரின் புகழ் பாடிய சுதந்திரப் போராட்ட வீரர் கவிமணியின் உருவச்சிலை நிறுவவும், வடசேரி “கவிமணி நிலையம்” நூலகத்தில் கவிமணியின் பெயர் பலகை வைக்கவும் ,மாற்று மொழியையே தமிழில் எழுதி இருப்பதை மாற்றி தமிழிலும் மாற்று மொழியிலும் எழுதுவதற்கும் , புலவர் சிவதானு கலைஞரைப் பற்றி எழுதிய நூலையும் இதர நூல்களையும் அரசு உடைமை ஆக்கவும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்தவும், தொடர்ந்து கன்னியாகுமரி பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைமையில் அனைத்து தமிழ் அமைப்புகளையும் இணைத்து 24- வருடங்களாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வை இவ்வருடமும் ( 1சிறப்பாக செய்வதற்கு ஆவண செய்யவும், திருவள்ளுவர் பிறந்த திருநைனார் குறிச்சியில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு முழு ஒத்துழைப்பு அரசு நல்கவும், வெள்ளிவிழா அரங்கில் ஆய்வு களஞ்சியம் முனைவர் பத்மநாபன் பிள்ளை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்த திருவள்ளுவர் மாதிரி சிலை கன்னியாகுமரியில் இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் அவர்களால் நிர்வாகிக்கப்படுகின்ற கூடத்தில் இருந்து விழா முடியும் வரை மக்கள் பார்வைக்காக விழா மேடையில் வைக்கவும் கலந்து கொண்ட புலவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் மூத்த தமிழறிஞர் தியாகி. முத்துக்கருப்பன் ,தமிழ் அறிஞரும் தொழிற்சங்க தலைவருமான இளங்கோ , கருங்கல் கண்ணன் ஆகியோரும் தம் கருத்துகளை பதிவு செய்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!