தமிழகம்

காட்பாடி அருகே பஞ்சாயத்தில் முறைகேடு தட்டிகேட்ட பிஜேபி பிரமுகர் படுகொலை ! திமுக பஞ்சாயத்து தலைவர் மகனும் கைது !!

22views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல் குமார்(47). இவர் பிஜேபி ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 16-ம் தேதி சென்னாங்குப்பம் சாலையோரத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.  பின் குடியாத்தம் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகல் கிராமத்தை சேர்ந்த கமலநாதன்(24) சந்தோஷ்குமார்(26) ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தொடர்ந்து தனிப்படை தேடியபோது வனப்பகுதியில் பதுங்கி இருந்த நாகல் பஞ்சாயத்து தலைவர் பாலா சேட்டு (55) அவரது மகன் தரணிகுமார்(28)ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தபோது நாகல் கிராமத்தில் பஞ்சாயத்தில் நடக்கும் தில்லு, முல்லுக்களை, ஆட்சியர் மற்றும் பிடிஓ-க்களுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்த காரணத்தால் ஆட்களை வைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.கே.வி.குப்பம் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர்.
பாலா சேட்டு நாகல் திமுக பஞ்சாத்துதலைவராகவும், தரணிகுமார் சிப்பந்தி ஆகவும் இருந்து வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!