17
இவ்வாரக் கவிதை :
ஓர் ஏழைக்கோ
இயலாதவருக்கோ..
ஒருவேளை உணவிட்டு
வயிற்றுப் பசி நீக்கி வை…
ஓர் ஆடை கொடுத்து
மானம் மறைக்கச்செய்…
குளிர் நீர் கொஞ்சம் தந்து
தாகம் தணியச் செய் ..
ஆபத்தில் கொஞ்சம் அடுத்தவனுக்கு உதவு …
ஏழை ஒருவனுக்கு
இதயத்தால் இரங்கு…
வாடிய முகத்தின்
வருத்தம் களையச்செய்…
முரட்டு மனிதருக்கும்
இரக்கம் காட்டு …
அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை …
மாட்டை விட
மனிதன் மேலானவன்
என்றுணர் ….
எப்போதும் சமுதாயத்தோடு இணங்கு….
உன் இறையை
நீ வணங்கு
அடுத்தவரையும்
வணங்க விடு….
மற்றவர்
வணக்கத் தலங்கள்
அபகரித்தல் விடு…
சாந்தம்
கை கொள்…
சத்தியத்தோடு
உறவு கொள்…
சக மனிதனை
மதித்து நட ….
எப்போதுமே
மனிதனாக இரு..
நட…
வாழ்…
வாழவிடு..
எந்நாளும்
பெருநாளும்
திருநாளும்தான்….
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment