தமிழகம்

ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி

187views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர் பேரணி இன்று நடைபெற்றது, இதனை மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா கொடியசைத்து துவங்கி வைத்தார், கலந்துகொண்ட தமிழ் அறிஞர்கள் சார்பாக தேரூர் சிவதானு மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்த சமூக சேவகர் மருத்துவர். தி.கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) குமரிக்கு புகழ் சேர்த்த திருநைனார் குறிச்சியில் பிறந்த திருவள்ளுவரின் திருக்குறளை தமிழக அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக அளித்தார்.

இந்த பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிறிஸ்தவ மகளிர் கல்லூரி வரை நடைபெற்றது,இதில் தமிழறிஞர்களான தமிழ் குழவி,மருத்துவர். ராஜேஷ், ஆபிரகாம் லிங்கன், சுரேஷ், முத்துக்குமார், பெ. மேகலாவர்ணன், இனியன் தம்பி, தொழிற்சங்க தலைவர் இளங்கோ, தமிழ் ஆசிரியர் ப.இளங்கோ, கருங்கல் கண்ணன், முனைவர் வேணுகுமார், முனைவர் தே. ஷிஜா ,முனைவர் மலர் திருமதி ஏஞ்சல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்( பொ )பி. ரெசினான் மேரி, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் , தமிழ் அமைப்புகள் செய்திருந்தனர். ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் சமூக சேகர் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு துணை இயக்குனர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!