தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடும் குளிரிலும் சிம்மக்குளத்தில் குழந்தை வரம் வேண்டி புனித நீராடிய பெண்கள் !!

56views
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு கோயில் சிம்மக்குளத்தை இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கற்பூரம் ஏற்றி திறந்துவைத்தார்.

குழந்தை வரம் வேண்டி பெண்கள் விரதம் இருந்து கடும் குளிரிலும் குளத்தில் புனித நீராடினர்.  இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் மு.பாபு, வேலூர் ஆர்டிஓ பாலசுப்பிரமணி, வேலூர் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் குமரகுரு, மற்றும் அறநிலைத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!