27
அதிகாலைச் சூரியனின் குளுமை
அடுத்து வரும் பொழுதுகளில் அக்னியாக மாறுகிறது…
அஸ்தமனப் பொழுதுகளில் மீண்டும் முன் போலவே
குளிர் நிலைகளில் கூடி விடுகிறது
சூரியனுக்கும் வாழ்வு ஒன்றுதான்
எவ்வளவு களைத்தாலும் மறுநாள்
சிரித்துக்கொண்டே
எழுந்து விடுகிறது…
என்ன புரிகிறது
ஏதாவது சொல்கிறதா?
நீயும்
எவ்வளவு களைத்தாலும் சிரித்துக்கொண்டே
எழந்து நட …
ஒருபோதும் அது தன் சோர்வையும்
சோம்பலையும்
வெளிக்காட்டுவதே இல்லை…
கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே
யார் சொல்லித் தந்தார்கள்
அந்த சூட்சமம்?
சூரியன் யார் தடுத்தாலும் மேகம் மறைத்தாலும்
ஒளி
கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது …
உதவி செய்து
கொண்டே தான் இருக்கிறது… மனதால்
நினைத்தால்
நீயும் ஒரு சூரியன்தான்…
அதிகாலை விடியல்
அந்திமாலையில்
முடிந்து விடும்தான்..
இருந்தாலும்
பரவாயில்லை …
மறுநாள் காலையில்
எழுந்து விடுகிறது அல்லவா? அதேபோல்
உன் கவலைகளை
மாலையில் புதைத்து
காலையில் எழு…
உன் முயற்சியின் உழைப்பால் உலகத்தை உழு..
அத்தாவுல்லா,
நாகர்கோவில்
add a comment