தமிழகம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! சட்டசபையில் மக்கள் கோரிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் !

112views
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நடத்தியஇந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு பெண்கள் இயக்கம், மக்கள் தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
.அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சே. பசும்பொன் பாண்டியன், ஜனநாயக புதிய எழுச்சி பேரவையின் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அறிவியல் பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாள பட்டி சுற்று வட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்! உண்மையான தொல்லியல் சின்னங்கள் பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திடு!  முல்லைப் பெரியாறு பாசனத்திட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக் கிட சட்டம் இயற்று ! என கோஷங்கள் எழுப்பினர்.
(குறிப்பு: ஆர்ப்பாட்ட கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.)

Right Click & View Source is disabled.

error: Content is protected !!