தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையில் புதுப்பித்த புனித பார்பரம்மாள் ஆலயத்தில் திருக்கொடியேற்றி அர்ச்சித்து திருப்பலி

260views
கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையில் புதுப்பித்த புனித பார்பரம்மாள் ஆலயத்தில் திருக்கொடியேற்றி அர்ச்சித்து திருப்பலி மேதகு ஆயர் .பீட்டர் ரெமிஜியுஸ் ( முன்னாள் ஆயர் கோட்டாறு ) தலைமையில் நிறைவேறியது. விழாவில் தந்தை அமலநாதன், பங்குத்தந்தையர், அலஞ்சி மறை வட்ட அருள் பணியாளர்கள் இணைந்து ஜெபித்தார்கள் . பள்ளி பணியாளர்கள், வியாபாரிகள், ஏலக்காரர்கள், அரசு ஊழியர்கள், சுயதொழில் செய்வோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பங்கு குடும்ப விழாவில் பங்குத் தந்தை ,விழா குழுவினர் மற்றும் ஊரார் அழைப்பிதழை ஏற்று சமூக சேவகர்- மருத்துவர். தி .கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ( தன்னலம் பாராமல் முழு ஊரடங்கு நேரத்திலும் கடற்கரை கிராமங்களில் மருத்துவப் பணியும் மக்கள் சேவையும் சமூக ஆர்வலர் பிரான்சிஸ் அலாய் அவர்களின் வேண்டுதலிலும் மற்றும் முக்கியஸ்தர்களின் வழிகாட்டுதலிலும் செய்தவர். 2019-ல் மேதகு ஆயர் அவரிடம் இருந்து நல்வாழ்த்துக்கள் பெற்றவர் . 2020 -தென் ஒளி பத்திரிகையில் இவரது பணி பிரசுரிக்கப்பட்டது. ) கலந்து கொண்டு சிறப்பித்தார். பல்லாயிரக்கணக்கான பங்கு மக்களும் அவர்கள்தம் உறவினர்களும் நட்புகளும் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!