உலகம்

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழக மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்

44views
ஷார்ஜா :
ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழக மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழக அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் ‘நீதிமன்ற நடைமுறைகளில் நடைமுறை அம்சங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
அவர் தனது உரையில் ஷார்ஜாவில் இங்கிலாந் து நாட்டு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற சட்ட படிப்பை படித்து வரும் இந் தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். விரைவில் வழக்கறிஞர்களாக ஆக இருக்கும் நீங்கள், தோற்றத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்குக்காக வருபவர்கள் சொல்வதை தெளிவாக கேட்டு தேவையான குறிப்புகளை தயார் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினார். மேலும் தனது நீதிபதி அனுபவத்தில் இருந் து பல்வேறு தகவல்களை விளக்கி கூறினார்.
முன்னதாக பல்கலைக்கழகத்துக்கு வந் த தமிழக மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழக அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீனுக்கு தலைமை செயல் அதிகாரி பிரியந் தா நீலவாலா, பேராசிரியர் முஹம்மது முஹிப்புல்லா, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், ஹைட்ரோலைட் நிறுவனத்தின் சித்திக், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், மாணவர்கள் அஹில் முஹம்மது, அல்பர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

மேலும் சிறப்பு விருந் தினர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந் த உரை தங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!