தமிழகம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா நிகழ்வில் மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

25views
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா நிகழ்வில் மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் திரு ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு முருகவேல், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திரு வேலுச்சாமி, பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எம் எம் கே எம் காதர் மொகைதீன், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் என் கே எம் சாகுல் ஹமீது, கல்விக் குழு தலைவர் செய்யது மூமின், முதுகுளத்தூர் முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஏ ஷாஜகான், முதுகுளத்தூர் முஸ்லிம் நல சங்க தலைவர் ஜாபர் மொஹிதீன், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முகமது சுலைமான் முகம்மது சுல்தான் அலாவுதீன், தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி, முன்னாள் தாளாளர் சீனி முஹம்மது, பள்ளிவாசல் நர்சரி & பிரைமரி பள்ளி முன்னாள் தாளாளர் சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!