தமிழகம்

பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் சமாதி இருத்தல் நிகழ்வு

33views
ஐயா வைகுண்டார் அன்பு வனம் சுவாமி தோப்பு தலைமை குரு பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் அவர்கள் அய்யா வைகுண்டர் பாதம் அடைந்தார். 3-12-2024 அன்னாரது சமாதி இருத்தலின் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன், மக்கள் பிரதிநிதிகள், மத குருமார்கள், அரசியல் பிரமுகர்கள், உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தென்குமரி கல்விக் கழக தலைவர் காமராஜ், செயலாளர் வழக்கறிஞர் .வெற்றிவேல், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், துணைத் தலைவர் கனகராஜன் ,பணி நிறைவு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர் . சமூக சேவகர் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய தேசிய போராளி ) இரங்கல் செய்தி பேசுகையில் கொரோனாவால் முழு ஊரடங்கு ஏற்பட்ட நிலைப்பாட்டில் அனுதினமும் சுற்றுவட்டார பகுதி ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் இடமாகவும், இயற்கையை பேணுகின்ற கொள்கை உடைய குடும்பத்தில் தாய் உள்ளம் கொண்ட சகோதரி பி. இரமணிபாய் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அவரது ஆன்மா இறைவன் பாதம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறி கொரோனா காலகட்டத்தில் மருத்துவ முகாம் ,நிவாரண பணிகள், இயற்கை பேணுதல் போன்றவைகளுக்கு உதவியதை நினைவு கூர்ந்து வணங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!