அமீரகத்தில் நடைப்பெற்ற கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ நூல் திறனாய்வு உள்ளிட்ட முப்பெரும் விழா
65
கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ நூல் திறனாய்வு, முன்னாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீனுக்கு ‘ சர்வதேச மனித நேய மாண்பாளர்” விருது மற்றும் ‘கல்விச் சுடர்’ ‘தாயகத்தின் நாயகர்கள்’ நூல்கள் வெளியீடு, தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை மொழி அறிவோம் அமைப்பில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழாவாக துபாய் எமிரேட்ஸ் ஸ்டார்ஸ் ஹோட்டல், மீட்டிங் ஹாலில் கோலாகலமாக கடந்த சனிக்கிழமை நடைப்பெற்றது.
முன்னாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘சிட்டுக்குருவி’ நூல் திறனாய்வை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் நூலை வழங்க முத்தமிழ் சங்கம் ஷா, தொழிலதிபர் சித்திக் மற்றும் எழுத்தாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் விழாவில் ‘கல்விச் சுடர்’ மற்றும் ‘தாயகத்தின் நாயகர்கள்’ ஆகிய இரண்டு நூல்களை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் மற்றும் இரா. கவிதா செந்தில்நாதன் தொகுத்த 1000 பக்கங்கள் கொண்ட 2024 ஆசிரியர் நாள் பன்னாட்டு உலக சாதனைக் கருத்தரங்கத் தொகுப்பு நூலான ‘கல்விச் சுடர்’ நூலை வெளியிட அன்னை மொழி அறிவோம் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்திய சுதந்திரதிற்கு பாடுபட்ட தியாகிகளின் நினைவுகளை போற்றும் ‘தாயகத்தின் நாயகர்கள்’ நூலை வெளியிட மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத்துல்லா பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் முன்னாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீனுக்கு ‘ சர்வதேச மனிதநேய மாண்பாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முத்தமிழ் சங்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன், சித்திரை ஜெபக்குமார் , கானல் குழுமத்தின் ஆசிப் மீரான், எழுத்தாளர்கள் காரைக்குடி மஜீத் ,சுரேஷ் பாபு, சசி எஸ்.குமார், திருமதி ரமாமலர், சானியா, மற்றும் அன்னை மொழி அறிவோம் தன்னார்வலர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அறுபதுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
விழாவில் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக சிட்டுக்குருவி நூல், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிறைவாக கல்லிடைக்குறிச்சி ஆ.முகமது முகைதீன் நன்றியுரை கூறினார்.
தொழிதிபர்கள் சித்திக் மற்றும் பாபு ராமகிருஷ்ணன் ஆகியோர் அனுசரணை வழங்கி சிறப்பித்தனர்.
MDS ஈவென்ட்ஸ் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
add a comment