கவிதை

எங்கள் இந்தியா

13views
எங்கள் இந்தியா
நுறுகோடி
மக்கள்தொகையை
தாண்டினாலும் !
உயிரை சுருட்டும்
வறுமையில் வாடினாலும் !
பிளவுகள் பல
எங்களிடம் தோன்றினாலும் !
இறுதியில் மரணத்தையே
நாடினாலும் !
எங்களுக்குள்
இந்தியன் என்ற
நாட்டுப்பற்றும்
தேசப்பற்றும்
என்றென்றும்
மாறாது
அழியாது
ஏனெனில்
இவை
எங்களின்
உணர்ச்சிவசமல்ல
உயிர்வசம் !
முனைவர் பாலசந்தர்,
மண்ணச்சநல்லூர்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!