கவிதை

டாக்டர் கலைஞர் வாழிய வாழியவே

268views
அஞ்சுகம் கருவுதித்த அன்பு குன்றே
அருந் தமிழ் முத்து வேலரின் அறிவுச்சுடரே
செம்மொழியாம் தமிழ் மொழியை வளர்த்தவரே
சொல் திறனில் வல்லவராய் விளங்கினாரே கலைஞர்
வள்ளுவனக் கோர் சிலை வடித்தாய் குமரியிலே
வல்லவனே எங்கள் நெஞ்சில் நிலைத்தாய்
அண்ணா தந்த இனிய இதயமே
அமுதத் தமிழின் அறுந்தவ புதல்வர்
திரைத்துறைக்கு திசை காட்டி
அரசியலுக்கு இவர் நாள் காட்டி
எதுகை மோனை இவரது விளையாட்டு
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என பாடியவர்
இலக்கியச்சுவை படைத்தவர்
இனிய மொழியில் சொல்லியவர்
நெஞ்சுக்கு நீதியாய் குறளுக்கு ஓவியமாய்
இயல் இசை நாடகம் ஏற்றி
இனிய ஒரு தலைவராய் வாழ்ந்தவர்
ஓய்வறியா சூரியன் நீ ஓய்வில்லை உனக்கு
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்றே சான்றோர் புகழ் மாலை பாடுகின்ற
கலைஞர் என்றும் கவிஞர்
பேராசிரியர் கவிஞர். பு. மகேந்திரன்

1 Comment

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!