67
வாழ்க்கையில் எத்தனை படித்து இருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும், எந்த உயர் நிலையில் வாழ்ந்தாலும், பலத்திறமைகளை பெற்றுருந்தாலும், “வாழ்க்கை விழிப்புணர்ச்சி” மட்டுமே நிஜ வெற்றிக்கு வழிகாட்டும்.
நாம் எல்லோரும் தெய்வம் போல குழந்தையாக பிறந்து, பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கிறோம். பெற்றோர்களும் தெய்வம் போல் குழந்தை பிறந்ததை எண்ணி தெய்வத்திற்கு நன்றி சொல்லி மகிழ்கின்றனர். எல்லாம் நலம்.
பின், அவரவர்கள் நிலைக்கேற்ப பள்ளி, கல்லூரி என்று சேர்த்து அகடமிக் படிப்பை படிக்கின்றனர். அதன் கூட பல டேலண்ட், ஸ்கில், ஸ்போர்ட்ஸ் என மற்றப்பல கலைகளை படிக்கின்றனர். இவை அனைத்தும் பெற்று நல்ல வேலையில் சேர்ந்து நன்றாக பணம் சேர்த்து மகிழ்ச்சியாக வாழ நினைக்கின்றனர்.
ஆனால், அந்த குழந்தைக்கு வாழும் போது, வாழ்க்கையில் ‘எது உண்மை, எது பொய்’ மற்றும் “எது நல்லது, எது கெட்டது”, யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எல்லா நிலைகளிலும் வழி நடத்தி காப்பாற்றும் சக்திப்படைத்த “அதிரகசிய வாழ்க்கை அறிவை” யாரும் கொடுப்பதில்லை.
ரூபாய் 50,000ம் மதிப்புள்ள மொபைல் போனை பாதுக்காக்க ஸ்கிரின் கார்டு, கவர், ஆன்டிவைரஸ், பாஸ்வோர்டு என்று எல்லாம் பயன் படுத்துகிறோம். ஆனால், அந்த மொபைலை பயன் படுத்தும், எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத சொத்தான அவர்கள் குழந்தையையின் மைண்ட்ஐ, Addictive ப்ரொவ்சிங் & நெகட்டிவ் கவர்ச்சியில் இருந்து பாதுகாக்க எந்த பாதுகாப்பும் பயன் படுத்துவதில்லை.
“மாய மாஸ் மீடியா அடிக்டிவ் உலகத்தின்” வேலையே அனைவரையும் (முக்கியமாக சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்) எப்படியாவது, எந்த ரூபத்திலாவது, மனிதாபிமானமே இல்லாமல் மயக்கி அவர்களின் நோக்கத்திற்கு அடிமைப் படுத்தி அழிப்பதே.
இப்படி இருந்தும், எல்லோரும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகங்காரத்தில் அல்லது அறியாமை காரணத்தால் மாயையில் மாட்டிக்கொண்டு தவிப்பதில் இருந்து காப்பாற்றும் “அதிரகசிய வாழ்க்கை ஞானம்“ அனைவரும் உடனே பெறுவது அவசியம்.
தினமும் பெற்றோர்களுக்கு 12 மணி நேரம் ஆபீஸ் வேலை, 8 மணி நேரம் தூக்கம் & 4 மணி நேரம் தினசரி செயல்பாடுகள் ( குளிப்பது, சாப்பிடுவது, உடற்பயிற்சி…) என்று, குடும்பத்தில் உள்ளவர்கள் நலனுக்கு என்று நேரமே இல்லாமல் முடிகிறது. ஆனால் இந்த மாய மாஸ் மீடியா கவர்ச்சி உலகம் 24×7 என்ற கணக்கில் தொடர்ந்து குழந்தைகளை / இளைஞர்களை, எப்படி எல்லாம் தன் பக்கம் இழுக்கலாம் என்று வேலை செய்கிறது என்றால் மிகையாகாது.
உடம்பை காக்க மருத்துவரை வைத்து இருக்கிறோம், பணத்தை காக்க பைனான்ஸ் ஆலோசகர் ஆடிட்டர் வைத்து இருக்கிறோம், முடி சரி செய்ய & முகத்தை அழகு செய்ய பியூட்டிசியன் வைத்து இருக்கிறோம், இப்படி படிப்புக்கு, திறமைக்கு, பணத்திற்கு, பாதுகாப்புக்கு, ஆன்மீகத்துக்கு என்று பலரை வைத்திருக்கிறோம். ஆனால், வாழ்க்கையில் மிக முக்கியமானது, “அன்பு, நிம்மதி, நல்உறவு, மகிழ்ச்சி, ஆரோக்யம் மற்றும் ஆனந்தமான வாழ்க்கை”. இவற்றைப் பெற நம் மனதை (mind) சுத்தம் செய்து மற்றும் மாயையில் இருந்து பாதுகாத்து உயர்த்தும் சக்திப் படைத்த “நல் வெற்றி வாழ்க்கை வழிகாட்டி” (அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல்) கட்டாயம் அவசியம்.
இந்த மாய மாஸ்மீடியா உலகில், நல் வெற்றி வாழ்க்கை வழிகாட்டி ஒருவரால் மட்டுமே, “அதிரகசிய வாழ்க்கை ஞானத்தை” நமக்கு உயர் நிலையில் கொடுத்து, அதை நம் வாழ்வில் செயல்படுத்த வைத்து, வெற்றி காண வைக்க முடியும்.
டாக்டர் பத்ரி நாராயணன்
ஹோலிஸ்டிக் ஹீலர், லைஃப் சைக்காலஜிஸ்ட், குடும்ப நல்வாழ்வு நிபுணர் Mob: 95515 55898
add a comment