தமிழகம்

கலாம் நம்பிக்கை விருதுகள் : ” எழுத்தாளர் விஜி ஆர் கிருஷ்ணனுக்கு ” ஊக்கமளிக்கும் கல்வியாளர் மற்றும் ஓவியர் விருது’

69views
விஜி ஆர் கிருஷ்ணன், – கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர், கவிஞர் என் பன்முகத் தன்மை வாய்ந்தவர்.
சென்ற மாதம் பொதிகை தொலைக்காட்சியில் ‘மங்கையர் சோலை’ நிகழ்ச்சியில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திரு விஜய் கிருஷ்ணா அழைப்பின் பேரில் கலந்துக் கொள்ள சென்றிருக்கிறார்.

மங்கையர் சோலையில் கலந்து கொண்ட மகளிர் அனைவருக்குமான ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் மூலமாக இவரை அறிந்து கொண்ட ஜேடன் புரொடக்ஷன் ‘ஸ்டார் ஐகான் அவார்ட்’ விழாக் குழுவினர் சிறந்த கல்வியாளராகவும், ஓவியராகவும் தேர்ந்தெடுத்து இந்த விருதினை வழங்கியுள்ளனர்.

11 வயதுப் பெண் wildlife photography ல விருது வாங்கியது, ஒன்பது வயது பெண் குழந்தை 96 சிற்றிலக்கியங்கள் பெயரை ஒன்று விடாமல் மேடையில் வாசித்து தன்னுடைய நினைவுத்திறனுக்காக விருது பெற்றது, 11 வயதில் மவுண்ட் எவரெஸ்ட் ஏரி சாதனை புரிந்த ஒரு பெண்குழந்தை, ‘நாளமில்லா சுரப்பியில் குறைபாடுள்ள ஒரு பெண் அனைத்து வகை நடனங்களிலும் குறிப்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், போன்ற கிராமிய நடனங்களில் சிறந்து விளங்கி விருது பெற்றது என இந்த விருது விழாவில் இவரை ஆச்சரியப்படுத்திய விஷயங்கள் என சிலவற்றை பட்டியலிடுகிறார்.

‘சின்ன வயசுலயே இவங்க சாதிக்கறாங்க. நாம என்னடானா இந்த வயசுல சிறந்த கல்வியாளர்களுக்கான இந்த விருது வாங்க வந்திருக்கோம் அப்படிங்கற ஒரு நினைப்பு இருந்துச்சு. ஆனால் அன்னைக்கு இந்த மாதியான பிளாட்பார்ம்ஸ் இல்ல. ஆனா இன்றைய வளரும் குழந்தைகளுக்கு அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமா சிறப்பான மேடைகள் இங்கு காத்திருக்கு. வாய்ப்புகள் நம் கண் முன்ன்னாடி கடல் போல் விரிந்து கிடைக்கு. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையில் அவர்களை பயிற்றுவித்து மேடைக்கு வெற்றியாளராக கூட்டி வருவதும் மிகவும் சிறப்பான அம்சம்னு நினைக்கிறேன். ‘ என்கிறார் விஜி ஆர்.கிருஷ்ணன்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்கி ஆசிரியர் அமிர்தம் சூர்யா, சிவகாசியில் இருந்து வந்திருந்த திலகபாமா மற்றும் சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத், சின்ன திரை, பெரிய திரை நட்சத்திரங்கள், திரைப்பட பாடலாசிரியர் சினிமாவில் வளர்ந்து வரும் இளைய நட்சத்திரங்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

1 Comment

  1. வாழ்த்துக்கள் வாழ்வில் வசந்தம் வளர்பிறையாக வாழ்த்துக்கள்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!