43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான நூல் வெளியிடப்பட்டது
103
ஷார்ஜா :
சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான நூல், நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 6.30 மணிக்கு 43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வளாக அரங்க எண் 7 ல் வெளியிடப்பட்டது.
சம உரிமை இதழ் ஆசிரியர் பேச்சாளர் திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆராய்ச்சி தலைவர் பேராசிரியர் சித்திரை பொன் செல்வன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழுமம் தலைவர் திரு. ஆசிப் மீரான், Fortune Five LLC, நிர்வாக இயக்குனர் திரு.பாபு ராமகிருஷ்ணன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் திரு. ஷாஜகான், திரு. ரஹ்மத்துல்லா, இளையான்குடி அபுதாஹிர் ஆகியோர் தொடர்ந்து நூலை பெற்றுக் கொண்டனர்.
இத வெளியீட்டு நிகழ்வில், ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி வெளி விவகார நிர்வாகி திரு. மோகன் குமார், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
முத்தமிழ்சங்க தலைவர் ஷா, அமீரக எழுத்தாளர் சுரேஷ் பாரதி, ஈவண்ட் ஆர்கனைசர் சானியா, MAK Curtains அப்துல்காதர் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
add a comment