தமிழகம்

அமைச்சர் சிவி கணேசன் உடன்_சந்திப்பு ! கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாற்காலி வசதிகள் ! ஆட்டோ தொழிலாளர்களின் நலன்கள் ஆகியவை குறித்து மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி நேரில் கோரிக்கை!

27views
நவம்பர்.08
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் பல்வேறு தொழிலாளர்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சி.வி.கணேசன் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
அப்போது கடைகளில், பெரிய அங்காடி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பணி நேரம் போக இதர நேரங்களில் நின்று கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உட்காரும் இருக்கை வசதி செய்யப்பட வேண்டும் என்று திராவிட மாடல் அரசின் புதிய சட்டம் கூறுகிறது.
ஆனால் அவ்வாறு பல இடங்களில் குறிப்பாக பெரிய நிறுவனங்களில் செய்யப்படுவதில்லை.
பல மணி நேரம் தொழிலாளர்கள் நின்று கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.
இதனை நினைவூட்டி அரசு அவர்களுக்கான வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை விரிவாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளும் கொடுக்கப்பட்டது.
ஆட்டோ தொழிலாளர்கள் தொடர்பான கோரிக்கைகள்
1. ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
2. ஆட்டோ தொழிலாளர்களுக்கு ESI திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
3. ஏழை, எளிய, தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் விட்டு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
4. பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்த ஏதுவாக அரசு வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள கழிப்பிடங்கள் பெரும்பாலான இடத்தில் பராமரிப்பின்றி உள்ளது.
பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பிடங்களை வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக தொழிலாளர் நலத்துறை மூலம் அவ்வப்போது ஆய்வு செய்து இதனை உரிய முறையில் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவற்றையெல்லாம் படித்துப் பார்த்த அமைச்சர் அவர்கள் இவை எல்லாம் மிக அருமையான கோரிக்கைகள் என்றும், ஒன்றன்பின் ஒன்றாக விரைவாக நாங்கள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.
மேலும் கடைகளில் நின்று கொண்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு விரைவில் ஒரு நினைவூட்டல் அறிக்கையை கொடுப்பதாகவும் கூறினார்.
இச் சந்திப்பின்போது மாநிலச் செயலாளர்கள் கலைக்குயில் இப்ராஹீம், மாநில துணை செயலாளர்கள் அரிமா. அசாருதீன், பொதக்குடி. ஜெயினுதின், MJTS மாநில செயலாளர் மாத்தூர். இப்ராகிம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!