உலகம்

உலக திருக்குறள் மையம் புதுச்சேரி, உலகத் தமிழர்கள் ( இணைய வழி ) பேரவை துபாய் இணைந்து நடத்தும் அசிஸ்ட் 24 மணி நேரம் உலக சாதனை நிகழ்வு ‘உலக திருக்குறள் மாநாடு 2024’

68views
உலக திருக்குறள் மையம் புதுச்சேரி, உலகத் தமிழர்கள் ( இணைய வழி ) பேரவை துபாய் இணைந்து நடத்தும் ‘உலக திருக்குறள் மாநாடு 2024’ அசிஸ்ட் 24 மணி நேரம் உலக சாதனை நிகழ்வு புதுச்சேரி வேல்ராம் பட்டு ஒயிஸ்மேன் மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 8ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கி 9 ஆம் தேதி காலை 9.30 மணிவரை நடைபெற உள்ளது.
தேசிய கல்வி அறக்கட்டளை (துபாய் ) , மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட திருக்குறள் இருக்கை மதுரை, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இணைய வழி பன்னாட்டு திருக்குறள் கருத்தரங்கமும் இதில் 12 மணிநேரம் இதில் இடம் பெறுகிறது.
8 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு தொடங்கி 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிறைவடையும் இந்த சாதனை கருத்தரங்கம் மொத்தம் 12 மணி நேரம் ஜூம் சந்திப்பில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சியில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் முனைவர் என் பஞ்சநதம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்துகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் முனைவர் போ சத்தியமூர்த்தி அவர்கள் சிறப்புரை நிகழ்த்த , பிரைனோ பிரைன் நிர்வாக இயக்குனர் தமிழ் ஆர்வலர் திரு அனந்த் சுப்பிரமணியம் அவர்கள், மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருத்தாளர் திண்டுக்கல் அ. ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்த உள்ளனர்.
நிகழ்ச்சி மூன்று அமர்வுகளாகநடை பெறுகிறது. இந்த சாதனை நிகழ்வின் நிறைவு விழா இந்திய நேரம் காலை 9.30 மணி முதல் காலை 10:30 மணிவரை நடைபெறும்.

இந்த சிறப்பு அமர்வில் வி.ஜி.பி.குழுமத்தின் தலைவர் கலைமாமணி செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்த உள்ளார். கோயமுத்தூர் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்.
திரு. சம உரிமை இதழ் ஆசிரியர் எஸ் எம் இதயத்துல்லா அவர்கள், சென்செக்ஸ் நிறுவன செயற்பாட்டு இயக்குனர் முனைவர் கவிதா செந்தில்நாதன் அவர்கள், கலந்துகொள்கின்றனர்.
உலக சான்றிதழ் வழங்கி நிறைவறை நிகழ்த்துகிறார் முனைவர் ஆர் ராஜேந்திரன் அவர்கள். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள் நன்றியுரை வழங்க காத்திருக்கின்றனர்.
இந்த இணைய வழி கருத்தரங்கில் மஸ்கட், உகாண்டா, பஹரைன், கத்தார், டென்மார்க், ஒமான், மொரிசியஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, கம்போடியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பப்புவா நியூகினியா, தென் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, எத்தியோப்பியா நாடுகளை சேர்ந்த மிகச்சிறந்த பேச்சாளர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர் என்பது ஒரு தனி சிறப்பு.
கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் முனைவர் போ சத்தியமூர்த்தி அவர்கள்,  உலக திருக்குறள் மையம் புதுச்சேரி திரு பா சந்திரமௌலி, கவிவானில் கவி மன்றம் கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பாண்டிச்சேரி திருமதி கவிதாயினி கலாவிசு, தமிழாசிரியர் எழுத்தாளர் பேச்சாளர் பெங்களூர் கவிஞர் இர.தேன்மொழி, கோயம்புத்தூர் உதவி பேராசிரியர் முனைவர் பிரேமலதா ஆகியோர் நிகழ்ச்சி அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுகின்றனர்.
இந்த நிகழ்வில் பங்குபெற கீழ் கண்ட இணைப்பை சொடுக்கி இணையலாம் :
https://us06web.zoom.us/j/4421283386?pwd=TG9abUdYSFJvaXlvODdDOS9qR3Vhdz09&omn=88388651222
http://Meeting ID: 442 128 3386
http://Passcode: 123456

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!