உலகம்

43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ நூல் வெளியீடு

109views
உலகில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக நடைபெறும்  43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது.  பல்வேறு நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் அரங்குகளை அமைத்து தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைக்கின்றன.
எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களை சந்திக்க எழுத்தை கொண்டாட ஒரு வாய்ப்பாக இந்த கண்காட்சி பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அமீரக எழுத்தாளர்களின் படைப்புகள் பல இந்த முறை வெளியீடு காண இருக்கின்றன.
சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான புத்தகம், நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 6.30 மணிக்கு கண்காட்சி வளாக அரங்க எண் 7 ல் நடைபெற உள்ளது.
இந் நிகழ்விற்கு தமிழகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் சம உரிமை இதழ் ஆசிரியர் பேச்சாளர் திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளர்களாக துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆராய்ச்சி தலைவர் பேராசிரியர் சித்திரை பொன் செல்வன், ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி வெளி விவகார நிர்வாகி திரு. மோகன் குமார், ஷார்ஜா IDM பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr. ஜனகன் விநாயகமூர்த்தி, அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழுமம் தலைவர் திரு. ஆசிப் மீரான், Fortune Five LLC, நிர்வாக இயக்குனர் திரு.பாபு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சி வரும் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!