தமிழகம்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போர் நிறுத்த கவன ஈர்ப்பு நிகழ்ச்சி

84views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அமைதியை நிலைநிறுத்தவும் உலக சமாதானத்திற்கு வேண்டியும் நடைபெற்ற கவன ஈர்ப்பு நிகழ்ச்சியில் ஊழல் கூட்டமைப்பின் தலைவர் அந்தோணி மைக்கேல் தலைமை வைத்தார். மருத்துவர் பெர்லிங்க்டன் முன்னிலை வகித்தார். திரு . குழந்தைசாமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சமூக சேவகர் தி .கோ. நாகேந்திரன் கலந்துகொண்டு, ‘சாந்தியும் சமாதானமும் உண்டாக இறைவனிடத்தில் கையேந்துவோம். அவன் இல்லை என்று சொல்வதில்லை என்ற நம்பிக்கையோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். அன்பும், அமைதியும், அறமும் உள்ள நல்ல சூழலை உலக மக்களுக்கு இறைவன் தருவதற்காக நாம் அனைவரும் நம்மால் இயன்றவரை சுயநலம், சமுதாய சீரழிவுகள் , பேராசைகளால் நம் அருகாமையிலும் நம் நாட்டிலும் உலக அளவிலும ஏற்படுகின்ற பெரும் பாதிப்புகளையும் , நிவர்த்தி செய்ய முடியாத பெரும் இழப்புக்களையும், மனிதநேயத்திற்கு எதிரான செயல்களையும், இயற்கைக்கு எதிரான நெறிமுறைகளையும் எந்த நாட்டில் எந்த இடத்தில் நடந்தாலும் அறவழியில் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போமாக. அனைத்து பேரிடருக்கும் காரணமாக அமைவது தனிமனித ஒழுக்கையின்மையே ஆகும். அனைத்து மோசமான சூழ்நிலைகளை சரி செய்ய மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும், நியாயங்களையும், நீதிகளையும் நம்மிடையே நிலைநிறுத்த நாம் நீதிமானாக முயற்சிப்போமாக. இங்கிருந்து தொடங்குகின்ற இந்த குரல் எட்டுத்திக்கும் எதிரொலித்து போர் ஒன்றே நல்ல தீர்வை தராது என்பதை உணர்த்தி உலகம் பூரவும் நல்ல எண்ணங்களை விதைகளாக விதைத்து “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதை வேரூன்ற செய்து உலகை அமைதி பூங்காவாக மாற்றுவோம்’ என்று கூறியதோடு “கற்போம் கற்போம் மனித நேயத்தை பாதுகாக்க கற்போம்,” “கற்போம் கற்போம் அன்பு, அறம், அமைதியை பாதுகாக்க கற்போம்” , “கற்போம் கற்போம் தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்த கற்போம்”, “கற்போம் கற்போம் இயற்கை நெறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முறியடிக்க காப்போம்”, “கற்போம் கற்போம் போரில்லா உலகை உருவாக்க கற்போம்”, “கற்போம் கற்போம் நம் தாய் நாட்டை பிளவுகளில் இருந்து பாதுகாக்க கற்போம்”,’ கற்போம் கற்போம் உலக ஒற்றுமையை பாதுகாக்க காப்போம்”, என்று கூற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் . இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடக்கும்போர் ஆகட்டும் ரஷ்யா உக்கரைனிடையே நடக்கும் போராகட்டும் அனைத்தும் விரும்ப தகாதவையே எனவே நம் குரல் யார் காதில் சென்று அடைய வேண்டுமோ அவர் காதில் ஆக்கபூர்வமாக சென்றடைய இறைவன் அருள் புரியட்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
போர் நிறுத்த கவன ஈர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். உலக சமாதானத்திற்கு வேண்டி நடைபெற்ற கவன ஈர்ப்பு நிகழ்ச்சியை ஊழல் தடுப்பு கூட்டமைப்பு ஓருங்கிணைத்து நடத்தியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!