கவிதை

தீபங்கள் எரியட்டும் …

27views
தீபங்கள் ஒளியேற்றும் காரணிகள்
அவை ஏற்றப்படும் போதெல்லாம் கொஞ்சம் கோபங்கள் குறைகிறது… மனதின் பாவங்கள் தணிகிறது …
தீபங்கள் ஒளி ஏற்றுகின்றன அதனால் இருள் விலகிவிடுகிறது
படரும் இடரும் விலகிவிடுகிறது..
தீபங்கள் ஒளியை மட்டுமல்ல அதுவரை நம் கண்களுக்குத் தெரியாத வழியையும் விசாலப்படுத்தி விடுகின்றன…
தீபங்கள் மனங்களின் உயரங்கள் …
நின்று
எரியக் கூடியவையும் உண்டு
நம் மனங்களை வென்று எரியக்கூடியவையும் உண்டு…
தீபங்கள் உதாரணங்கள் இருளெனும் சாபங்களை அது இல்லாமல் ஆக்கி விடுகிறது …
ஏன்…
வெளிச்சம்
நரகத்தையும் கூட
வெளியேற்றி விடுகிறது …
தீபத்தால் வீட்டிலும்
ஒளி ஏற்றலாம் …
ஒரு வீட்டையும்
எரிக்கலாம்…
தீபம் ஏற்றப்படும்
இடங்களில் எல்லாம்
ஒளி மட்டுமல்ல
அன்பும் துலங்குகிறது
அருளும் நிரம்புகிறது…
பண்பும் பரிவும்
பாசமும் நேசமும்
அதன் நிழலாகி விடுகின்றன…

ஆலயங்களின் தீபங்களை ஆச்சாரியார்கள் ஏற்றுகிறார்கள், அவர்கள் வாழ்க்கையிலும் போற்றுதற்குரிய ஒழுக்கத்தைப் போற்றுகிறார்கள்…
அவற்றை தீபங்கள் பேசுகின்றன …
இல்லை என்றால் அதே தீபங்களே அவர்களை எரித்துச் சாபங்களாக்கி …
வீசி விடுகின்றன …

தீபங்கள் …
மடாலயங்களில் மட்டுமன்று…
மக்களின்
மன ஆலயங்களிலும்
ஏற்றப்பட வேண்டும்…
வெறுப்பெனும் பகைமை…
மதப்பூசல்கள் எனும் பகைமை மாச்சரியங்கள் எனும் பகைமை வீழ்த்தப்பட்டாக வேண்டும்…
மனிதனின் இருளடைந்த உள்ளத்திலும்
ஒளி ஏற்றப்பட வேண்டும் …
கல்வி.. அன்பு …ஒழுக்கம்… மரியாதை… ஞானம்…
நன்மை… உண்மை…
சக மானுடஉதவி என்று அது பல்வேறு சுடர்களைத்
தாங்கி எரியட்டும்…
ஆலயங்களில் ஏற்றுவது போல மக்கள் உள்ளங்களிலும் ஏற்றுங்கள் …
பள்ளிகளில் ஏற்றுங்கள்… சமுதாயத்திலும் …
அதனால் இந்த தேசத்திற்கே நல்ல வெளிச்சம்ல வரலாம்…
ஒளி பெறலாம்…
நீங்களும்
உயர்வு பெறலாம்….
ஏனெனில்
வெளிச்சம்
சுவனத்தின் குறியீடு …அது எல்லோருக்கும் கிடைக்கட்டும்…
அத்தாவுல்லா
நாகர்கோவில்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!