தமிழகம்

நாகர்கோவில் இராமன்புதூரில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா உருவப் படத்திற்கு அஞ்சலி

99views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இராமன்புதூரில் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபரும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பல்வேறு புகழுக்கு சொந்தக்காரருமான ரத்தன் டாட்டா வயது மூப்பு காரணமாக தனது- 86 வயதில் 9-10-2024 இரவு -12 மணி அளவில் மும்பையில் காலமானார். அன்னாருக்கு நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு பசுமை நாயகன் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் தலைமையில் குளோபல் ஆயுஸ் அண்ட் ஹெல்த்கேர் ப்ராக்டிஸ் நர்ஸ் பெடரேஷன், திருவள்ளுவர் அறக்கட்டளை நாகர்கோயில், அகில உலக திருவள்ளுவர் அறக்கட்டளை, திருநைனார் குறிச்சி, கன்னியாகுமாரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம், கவிமணி நற்பணி மன்றம், தேரூர் ஆகிய அமைப்புகளின் சார்பாக மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. மலர் அஞ்சலிக்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் ஏ. ஜான் செய்திருந்தார்.
மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் கூறுகையில், ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது வரலாறு. அவனால் எவ்வளவு மக்கள் வாழ்ந்தார்கள் என்பது சிறப்பு. அவ்வகையில் எந்த வேறுபாடும் இன்றி மனித நேயத்தை கருத்தில் கொண்டு எளிமையாக வாழ்ந்து நம் நாடு தொடர்ந்து பொருளாதார ரீதியாக மேலோங்க வேண்டுமென்று ஆக்கப்பூர்வமான பற்பல பணிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டவர். அன்னார் மறைந்தாலும் அவர் விதைத்த நல் விதைகள் தொடர்ந்து நற்பயனை தரும் என்பது திண்ணம் என்று கூறினார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் திரு. சக்திவேல், ஆல்வின், ஐயப்பதாஸ், பாஸ்கர், பிரபு , பவுல் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்க கொண்டனர்.
பொதுமக்கள் பலர் கலந்து கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!