தமிழகம்

எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா?  மாநகர அதிமுக கண்டனம் 

18views
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா?  மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார், அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று முன்தினம் நடந்த போது நித்திய குமார் வீட்டில் முன் பகுதி ஜேசிபி இயந்திரத்தால் சேதம் அடைந்தது ,இது குறித்து அவர் கேள்வி எழுப்பியதால் அப்பகுதிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அவரின் உறவினர்கள் ஒப்பந்ததாரர் சென்றனர் ,அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் மேயர் தரப்பினர் நித்தியகுமாரை தாக்கியதால் அவர் படுகாயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை மேயர் தாக்கியதாக நித்யகுமார் புகார் கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு தலைமையில் கட்சியினர் மருத்துவமனையில் நித்திய குமார் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அப்போது நித்திய குமார் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை தராமல் காலம் தாழ்த்தி வருவதாக அப்புவிடம் கூறினார். இதனை அடுத்து அப்பு உடனடியாக மருத்துவமனை இணை
இயக்குனர் பாலச்சந்தரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இதற்கு மேயர் தரப்பில் கூறப்படுவதாக :நான் அடித்ததாக தவறான செய்தியை பரப்புகிறார்கள் அதிமுகவினர் வேண்டுமென்றே என் பெயரை கெடுக்க அதிமுகவினர் பொய் தகவல் பரப்புகின்றனர்.
எதிர்க்கட்சியினரை கேள்வி எழுப்பும் போதும் மக்களை அடிப்பதும் பொய் வழக்கு போடுவதும் இந்த திமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. 31-வது வார்டில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது போலீஸ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பு கூறினார்.
லிப்ஸ்டிக் போட்டு வந்த ஒரே காரணத்தை காட்டி சென்னை மேயர் பிரியாவின் தபேதார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு போல் தஞ்சையில் போன் பேசிய மாநகராட்சி ஊழியரின் போனை பறித்த தஞ்சை.மேயர் என்ற சர்ச்சைகள் தொடர்ந்து நிலையில் வேலூர் மேயரும் இந்த பட்டியலில் சேர்ந்து உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!