தமிழகம்

அரிதான இரத்த பிரிவு கிடைக்காமல் ஏற்பட்ட பதட்டத்தை தீர்த்த இரத்த தானம் செய்த கொடையாளிகளுக்கு சமூக சேவகர். மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் பாராட்டு

152views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அவசர அறுவை சிகிச்சைக்கு அவசிய பட்ட அரிதான இரத்த பிரிவு கிடைக்காமல் ஏற்பட்ட பதட்டத்தை நிவாரணம் செய்யும் வகையில் தன்னிச்சையாக இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்த தானம் செய்த கொடையாளிகளான திரு. சிவா,திரு. அஜித் குமார், திரு .அனீஸ் ஆகியோரை சமூக சேவகர். மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் ( கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நலன் கருதி இரத்ததான முகாம்களும் நோயாளிகளுக்கு அவசியமான ரத்த பிரிவுகள் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தவர் ) வருகை தந்து கூறுகையில், ‘இரத்ததானம் செய்பவர்கள் போற்றுதலுக்கு மட்டுமல்லாமல் வணக்கத்திற்கும் உரியவர்கள்’ எனக் கூறி இரத்ததான கொடையாளிகளை பொன்னாடை போர்த்தி வணங்கினார். உடன் வழக்கறிஞர் ஷேக் மைதீன், தினா இருந்தனர்.

இரத்ததான வங்கியின் நடைமுறைகளை திரு. பாலன் , திருமதி .லதா, செல்வி .சாந்தி செய்திருந்தனர். இரத்த தானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செட்டிகுளம் பொறியாளர். ரெனின் , ஆசிரியை. பொன் .அனுஷா, திரு அகஸ்டின் பிரபு ஆகியோர் செய்திருந்தனர். நோயாளின் பிள்ளைகளான திரு. ராஜன் மற்றும் . திருமதி .ஷிபா சமூக சேவகர் மருத்துவர் தி கோ நாகேந்திரனை அணுகி வஞ்சையோடு மாலை 5:30 மணிக்கு மதியம் உணவை உண்டு செல்லுங்கள் என்று கூறியது உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது எல்லாம் வல்ல இறைவன் இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக அமைய இங்கு வருகை தந்திருக்கின்ற நாங்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றோம் என்று கூறி விடைபெற்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!