தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது

355views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையில் நடைபெற்ற கிம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு அதை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை கிளையை கிம்ஸ் மருத்துவமனையின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான .எம். ஐ. சகாதுல்லா அவர்களின் சகோதரர் திரு.இக்பால் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

உடன் சமூக சேவகர் – மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ), இரணியல் காவல்துறை ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன் மற்றும் கிம்ஸ், மருத்துவமனை குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் மருத்துவர். கோபால் சுரேந்திரன், மருத்துவர் தீபக், மருத்துவர். பாலமுருகன் ,மருத்துவர். ரெஜு தாமஸ், மருத்துவர். சலீம் மகப்பேறு மருத்துவர். மினி கோபால் ,பிரதீபா,திரு. ஹரிஹரன், திரு. பிஜூ, திரு.முரளி மற்றும் பல மருத்துவர்கள் , முக்கியஸ்தர்கள் ,அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் கூறுகையில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் நாட்களில் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும் ஹெச். பி. வி. புற்றுநோய் தடுப்பு ஊசியை ( கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி )13- வயசுக்கு மேல் 19- வயசுக்குள் உள்ள மகளிர் பயன்படுத்த வேண்டிக் கொண்டார் . இந்த மருத்துவ சேவைக்கான வாய்ப்பை தந்த கிங்ஸ் மருத்துவமனை குழுமத்தில் தலைவரும் செயற்குழு இயக்குனருமான மருத்துவர் .எம். ஐ. சகாதுல்லா அவர்களுக்கும் கிம்ஸ் மருத்துவமனை குழுமத்திற்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார். உடன் மருத்துவர் .மோகன்தாஸ் , சவுதி அரேபியா கிம்ஸ் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர் முத்து . மருத்துவர் நாகேந்திரன் திரு செல்வகுமார் ஆகியோர் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!