இந்தியா

இந்திய வெடிமருந்துகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக Reuters நிறுவனம் பரபரப்புச் செய்தி

32views
இந்திய நிறுவனங்களிடம் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கும் பீரங்கிகள் & வெடிமருந்துகள் உக்ரைனுக்குத் திருப்பி விடப்படுகிறது
இதற்கு இந்தியாவிடம் இருமுறை மறைமுகமாக ரஷ்யா எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையிலும், இந்த வர்த்தகத்தை நிறுத்த இந்திய அரசு இதுவரை முயற்சிக்கவில்லை.  ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக ஆயுதப் பரிமாற்றம் ஓராண்டுக்கு மேலாக நிகழ்ந்து வருவதாக சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி Reuters கூறுகிறது.
உக்ரைனுக்கு இந்திய ராணுவப் பொருட்களை அனுப்பும் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு ஆகியவை அடங்கும் எனவும் கூறியுள்ளது.  இந்தியா அரசுக்கு சொந்ததமான ‘இயந்திரா’ நிறுவனம் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகளை உக்ரைன் பயன்படுத்துவதாக Reuters விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!