தமிழகம்

ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்

164views
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நிர்வாகிகள் ரொட்டேரியன் பி. எச். எப். தமிழ்செல்வி, ரொட்டேரியன் பி .ஹெச்.எப். சுபா செந்தில், ரொட்டேரியன் பி.ஏ.ஜி. ஸ்ரீதேவி பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் சமூக சேவகர்- தி.கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ( முழு ஊரடங்கு நேரத்திலும் பொதுமக்கள் நலன் கருதி இரத்ததான முகாம்கள் நடத்தியவர் ) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இரத்த தானம் செய்வதற்கான நடைமுறைகளை மருத்துவர் எஸ்.சினேகா, மருத்துவர் ஆர் .ஷெரின் அஸ்மிதா செவிலியர்கள் பி. பிரபாஜா ,எஸ் .நிஷா, கவுன்சிலர் எஸ். சிவகுமார், உதவியாளர் எஸ். சிவகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். மரு. தி .கோ. நாகேந்திரன் சமூக சேவகர் கூறுகையில் புத்தர் கூறியது போல இரத்தம் எல்லோருக்கும் சிவப்பு ( பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் கொண்டதாக இரத்தம் இருந்தாலும் சிவப்பாக வண்ணமாக அமைந்தது ) என்பது நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

நாம் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி இரக்கத்தோடு நம்மில் ஒருவர் பாதிப்படையும் போது அவருக்காக எந்த வேறுபாடும் இன்றி ரத்ததானம் செய்வது தானத்தில் ஒரு சிறந்த தானம் ஆகும் அதுபோல் இன்றைய தினம் இரத்த தான முகாம் நடத்துவதற்கு சிறப்பாக வழி வகுத்து தந்த கல்லூரி முதல்வர் மருத்துவர் .லியோ டேவிட், மருத்துவர், ஜோசப்சென், மருத்துவர். விஜயலட்சுமி ரெனிமோல் , மருத்துவர். கிங்ஸ்லி ஜெப சிங் , மருத்துவர். ஆர். கே. ராகேஷ் ஆகியோர்களுக்கும் நன்றியை தெரிவித்து இந்த ரத்த தான முகாம் சிறப்பாக அமையும் பொருட்டு இங்கு வந்து ரத்ததானம் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் சிறப்புகள் செய்யட்டும் என்று கூறி கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வும் அன்றும் இன்றும் என்றும் வாய்மை பிம்பங்களாக செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்கின்ற ஊடகங்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற கூறினார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஊர் தலைவர். ஏ.ஆர். கென்னடி, வழக்கறிஞர் ஏ.டென்னிஸ் மெர்லின் , ஜஸ்டிஸ் மில்டன், ராணி ஆகியோர் இரத்ததான முகாமுக்கு உறுதியாக இருந்தனர். இரத்ததான வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!