சிறுகதை

புதிரான புரிதல்

40views
சிறுகதை :
மௌனங்களை மீதமாய் சுமத்திக்கொள்ளும் மேகங்களின் வெள்துணி அணிநடை சோகமானதாய்த் தோன்றிட, பலமிழந்த தென்றலின் தழுவுதல்கள் பிரம்மையில் வீழ்த்திக்கொண்டிருந்ததா?
இமைக்கடங்கா கருவிழிகள் இமைத்துக்கொள்ள அத்துணை ஆர்ப்பரித்தலில் தொலைந்தேன்.  தங்கம் பதினெட்டை அடைந்திருந்தாள்.  வீட்டுல சொந்தங்கள் அவளுக்கு கலியாணம் செய்து பார்க்க ஆவலில் மூழ்கிப் போனார்கள்.
யன்னலருகில் தையல் மிசின், தடதடவென மிதித்துக் கொண்டிருப்பாள்.
அவளிலும் ஐந்து வயது மூத்தவன் நான். காலையில் நாலுக்கெல்லாம் விழித்துக் கொள்வாள்.  பொழுதின் ஆதிக்கடன் முடித்தவள், கோலம் போட்டு வீட்டையும் தினம் தினம் அலங்கரித்து வைப்பாள் .
ஸீசன்கள் வந்துவிட்டால் அவளை, யன்னலருகில் இருக்கும் தையல் மிசினை மிதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
என் அம்மாவின் சமையலில் இல்லாத புதுருசி. தங்கத்தின் கையில் தங்க வளையல் போட்டுப் பார்க்க சின்ன வயசுல இருந்து காசு சேத்து வச்சு இப்ப நாற்பதாயிரம் ரூபாய் சேர்த்திருக்கிறேன்.
இத நினைச்சா எனக்கும் ஏதோ பொறுப்புணர்வு இருப்பதைப்போல எண்ணிக் கொள்வேன். அவளின் இயற்பெயர் ஞாபகத்திலும் இல்லை. ஸ்கூலில விஞ்ஞானப் பாடத்துல தாக்க வீதத்தொடர டீச்சர் மனப்பாடம் பண்ணிக்கொண்டு வரச்சொன்னா.
முதலில் பொற்றாசியத்தை டீச்சரின் பெயரிலேயே ஆரம்பித்தேன்.” கமலாவும் நானும் கடைக்கு மாங்காய் அள்ளச் சென்றோம்…” என்று அதில்ல கடைசியா பொன் தான் வரும் அப்போதெல்லாம் டீச்சர் சொல்லுவாங்க பொன்னிற்கு எப்போதும் விலைமதிப்பு குறையவே குறையாதுன்னு
மனத்தில் ஊகித்துக் கொள்வேன் என் தங்கத்தின் பெறுமதியும் அப்படியென்று.தங்கத்திற்கு கலியாண நாளும் வந்துடுச்சி.
கலியாணம் முடிஞ்சி மாப்புள வீட்டுக்கு போக தயாராகிக் கொணடிருந்தாங்க.  மாப்புள தங்கத்தின் கைகளை பற்றிக்கொண்டு காரில் ஏறுவதைக் கண்டேன்.
அந்நொடிகளில் நான் இகத்தில் இருக்கவில்லை. என்னுள்ளம் மூன்றரை மீட்டர் துள்ளித்துள்ளி குதித்து சந்தோஷகளின் உச்சத்தை தொட்டு விட்டதாக பூரித்துப் போனேன்.
மனத்தினால் தங்கத்தை “தங்கம் என்னப்பாருடா கண்ணு” யென்றேன். வெறுமனே மனத்தினால் தான். அவளின் கண்கள் என்னை அவலங்களின் நிர்கதியில் வீழ்த்திடுமோ யென அஞ்சிப்போனேன்.
கவின் கண்ணின் அப்புத்துளிகள் என் இதழைத் தொட்டு மலரச்செய்தது.  அவளும் அவ்வாறே இதழை விரித்துப் புன்னகைத்துக் கொண்டாள்.
என் சொந்தங்கள் அவளை கையசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
தங்கத்தின் காலியாண வேல யெலல்லாத்தையும் முடிச்சிட்டு தடிபிடியென அடுத்தநாள் ஆபிசுக்குச் சென்றேன்.
ஒரு வாரத்துல மாத சம்பளம் கிடைத்தது.  அதை எடுத்து அவளது கலியாணத்துக்காக அங்கு இங்கு என்று வாங்கிய கடன யெல்லாம் திருப்பி கொடுத்துட்டு பல நாள் கண்களிரண்டும் கண்டு கொள்ளாத நிம்மதி நித்திரையில் நுழைந்து கொள்வதே பல நாள் கனவாயிருந்தது.
கட்டிலில் தூக்கம் வருவதாய்த் தெரியவில்லை. தலையணயையும் விரிப்பையும் அனைத்துக்கொண்டு விறாந்தையை நோக்கி விரைந்து தலையணையில தலையை வைத்தேன்.
மனதில் ஏதோ ஊசல் களின் ஆட்டம் போலும், தையல் மிசினைக் கண்டேன். அவள்தான் அவளது கணவனின் வீட்டில் இருக்கிறாளே!.
இன்றிரவும் நித்திரையில் கலக்கம் எழுந்து என் மனதை வருடிய பாவலர் பஸில் காரியப்பரின் ஆத்மாவின் அலைகளை ஒரு முறை புரட்டினேன்.
கண்களை மூடிக்கொள்ள மனம் பிடிக்கவில்லை. பேனாவும் புத்தகமும் எனை வதைப்பதை உணர்ந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.
மனதினில் எழுந்து நிறைந்திருந்த அலைகளை பேனாவின் வாயிலாக காகிதத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். புத்தகமும் நிரம்பிவிட்டது. மனதின் பாரம் சற்றேனும் குறைவதை உணர்ந்தேன்.
எழுதி விட்டு வலுப்போராய் நித்திரையில் புகுந்து கொள்ள முதலடி முயற்சியைத் தொடர்ந்தேன்.
எம்.பீ.எச்.பாத்திமா ஸ(z)ஹ்ரா
பேருவளை

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!