57
ஏற்றி விடுவதற்கானவை ஏணிகள்…
அவை எப்படி ஏறும்…
வரைமுறை மீறக்கூடாத வாழ்வின்/ இலக்கணங்களைப் பேசும் ஏணி
வரைமுறைகளை எப்படி மீறும்?
எல்லா இலக்கணங்களையும்/ எடுத்துப் பேசும்
சட்டங்களின் சட்டகங்களுக்குள்/ துருப்பிடிக்கக் கூடாது…
சட்டச் சிக்கல்களையும்/ இடியாப்பச் சிக்கல்களையும்/ எடுத்துப் பிரித்து விடுகின்ற
சட்ட வல்லுனர்களுக்கு / சங்கடங்களின்
மறு படியக்கூடாது…
உயர்ந்தவர் வழுக்கல்/ பௌர்ணமிச் சந்திரனின் வடுக்கள்
என்றான் வள்ளுவன்…
எங்கிருந்து பார்த்தாலும்/ தெரியுமாம்…
கால் சுற்றி வந்து அதிசயக் கனிகள் பெறும்
தும்பிக்கை பிள்ளைகள் போல்
இந்த நம்பிக்கைப் பிள்ளைகள்…
ஏணிகள்/ அப்படியேதான் இருக்கின்றன …
இருக்கட்டும் குற்றமில்லை…
நம்பிக்கைகளை ஊட்டிய
மாணவப் பிள்ளைகளின் மாண்பும் புத்தியும்
அந்த ஏணிகள் வழியாகவே
உலகை அவர்கள் முன் நிறுத்துகின்றன …
அப்போது
ஏணிகளின் பெருமைகளும் சிறப்புகளும்/ பிரபஞ்சத்திற்குப் புரிய வருகின்றன…
நெருப்புக்குச்சியை உரசி
விளக்குகளை ஏற்றி வைத்த
பித்தனைப் போல
இருந்த இடத்தில் இருந்தவாறே/ எளியவர்களை
ஏற வைக்கின்ற …
ஏற்றி வைக்கின்ற …/இந்த ஏணிகள்/ தன்னை உரசி வெளிச்சம் தரும்/ நெருப்புக் குச்சிகளைப் போன்றவர்கள்…
ஆயிரம் மெழுகுத்திரிகளை/ ஏற்றி விடுகிற
தீக்குச்சியை
நீங்கள் அணைத்து விடுகிறீர்கள் ..
அந்த ஆயிரம் சுடர்களுக்கும்
அந்த ஒற்றைக் குச்சி தானே
ஆணிவேர்…?
இவர்களுக்கு
மற்றவர்களை
ஒளிர வைப்பதுதான் நோக்கம்…
ஏணிகள் ஏறாவிட்டாலும்
ஏற்றி விடுவது தான்
இங்கும் நோக்கம்…
எப்படி இருந்தால் என்ன?
இருட்டுகள் விலக வேண்டும் …
தேசம்
வெளிச்சம் பெற வேண்டும் ….
அதுதானே முக்கியம்…?
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment