உலகம்

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

62views
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்..
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்..
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களிடம் தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களையும் துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக இவருக்கு எக்ஸிட் அடிக்க சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்து நேற்று இரவு சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர் அதனைத் தொடர்ந்து.
இன்று 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமான மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம் அவர்கள் பயண துணையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாதில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும்.
மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது
மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது.

கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய RT தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவர் ரீதியாக உதவிய மரு. அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர். ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகை இல்லை இதற்கு உதவிய அனைவருக்கும் இதய அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..
கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..
இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது
பிறர் நலன் பேனுவதுதான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும். தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும் இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம்…
தகவல் :
சமூக நலத்துறை. இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்.
மத்திய மண்டலம்,
ரியாத் சவுதி அரேபியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!