தமிழகம்

சங்க நாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா : இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் மான்மிகு அருணாச்சல அரவிந்த குமார் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்.

70views
உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பாக நடைபெற்ற சங்க நாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா 23ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிடி அரங்கத்தில் நடைபெற்றது இந்த விழாவில் சங்கனாத செம்மல் காயல் சேக் முஹம்மது பாடிய பாடல்கள் பத்து பாடகர் ஐந்து பாடகிகள் கொண்ட பாடகர் குழு பாடி அசத்தினர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சங்கநாதர் செம்மல் காயல் சேக் முகமது விருது 4 பேருக்கு கொடுக்கப்பட்டது பாடகி சுனந்தா அவர்களுக்கும் பாடகி பாப் ஷாலினி அவர்களுக்கும் இசையமைப்பாளர் பாடகி ஏ ஆர் ரைஹானா அவர்களுக்கும் திரைப்பட இயக்குனர் கலை மாமணி.டாக்டர் லியாக்கத் அலி கான் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து விருதுகளை வழங்கிய இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் மான்மிகு அருணாச்சல அரவிந்த குமார் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவர் கலைமாமணி டாக்டர் இறையன்பன் குத்தூஸ் அவர்களும் தமிழ்நாடு கேபிள் டிவி சங்கத்தின் தலைவர் கவிஞர் காயல் ஆர் எஸ் இளவரசு அவர்களும் ஐ என் டி யு சி தேசிய பொதுச்செயலாளர் அமீர் கான் அவர்களும் மலேசியா அழகி பிரியா ராமசாமி அவர்களும் இலங்கை சமூக சேவகி சாமிலா ஜெயினுள் அவர்களும் பாடகர் இலங்கை சலீம் அவர்களும் இலங்கை வசந்தம் தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் அறிவிப்பாளர் திரு தினேஷ் சுந்தரம் அவர்களும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ் ராக் அவர்களும்.மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்களும் வடகரை ஜிம்மா பள்ளியின் தலைவர் டாக்டர் மீரான் மொய்தீன் அவர்களும் டாக்டர் தன்வீர் அகமது அவர்களும் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் அவர்களும் மற்றும் பாண்டியன் கலீல்.போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

50 பள்ளி மாணவர் மாணவிகளுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் எஸ் எம்.ரஷ்மி ரூமி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!