உலகம்

துபாய் நூலகத்துக்கு தமிழக எழுத்தாளரின் நூல் அன்பளிப்பு

52views
துபாய் :
துபாய் நகரின் அல் ஜடாப் பகுதியில் பிரமாண்ட நூலகமாக முஹம்மத் பின் ராஷித் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரபி, ஆங்கிலம், தமிழ், சீனம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பெரியார், அண்ணா, கலைஞர், கவிஞர் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரஹ்மான், இறையன்பு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பலர் எழுதிய தமிழ் நூல்கள் உள்ளன. திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, பாரசீக மொழி அறிஞர் மௌலானா ஜலாலுதின் ரூமியின் மஸ்னவி ஷரீப்பின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஏழு பாகங்களும் இங்குள்ளது.
இந்த நூலகத்துக்கு பல்வேறு மொழி எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்களது நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் கவிதை நூலை நூலக அதிகாரி முஹம்மதுவிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.
இதனை பெற்றுக் கொண்ட நூலக அதிகாரி தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!