59
இயற்கை சீறும்போது
அதன் இன்னொருபுறம்
வியந்து பார்க்கிறது…
இடருற்றவருக்கு
வேறொரு கரம் தந்து
இனிய செய்கிறது….
மானும் மாடும்
மரமும் காடும்
யானையும் எருதும்
இனிய நட்புறவாகின்றன…
பூவும் பொழுதுமான புண்ணியங்கள்
பொட்டெனப் போகின்ற பொழுதுகள் …
காக்கும் இயற்கைக் கரம்
கடுமையாகின்ற வேளைகள் …
கதியற்று நிற்கும்
கலங்கியவர்கள் விழிகளின் கண்ணீர்
காயவிட்டப் போதுகளில் எல்லாம்
மனிதன் கையறு நிலையில் நிற்கிறான்…
காலறுந்து போனது போல் கதறுகிறான் …
இடிபாடுகளில் இருந்து வெளியேறி
கொடும்பாட்டுக் காடுகளில் தஞ்சம் ஆகிறான்…
அங்கும் முரண்பாட்டு மிருகங்களின் முன்
மாட்டிக் கொள்ளும் போது
கண்ணீர் விடுகிறான்…
அதுவும்
மனிதன் கட்டுப்படுத்த முடியாத காட்டு விலங்குதான்…
ஆனாலும் மனிதனோடு பழகுகிற மிருகம்…
மனிதன் உணர்வுகள் அறிகின்ற மிருகம்…
“கொன்றுவிடாதே… எங்களை அடைக்கலம் தேடி வந்திருக்கிறோம்”
அபயக் குரலின் சோகம் அவைஅறியுமோ…?
அவற்றின் கண்களிலும் கண்ணீர் வழியுமோ…?
இயற்கைச் சீறும் போது
இன்னொரு வழியில் இயற்கையே அணைக்குமோ…?
தெரியவில்லை…
இருந்தாலும் …
இந்த மூன்று யானைகள் வயநாட்டுக் காட்டின்
வலியறிந்த உயிர்கள் …
விடியும் வரை விழித்திருந்து
தஞ்சம் புகுந்தவரை தயவோடு காத்த
தயாளங்களின் தீட்சண்யங்கள்…
வரலாறு
வயநாட்டு மக்கள்
வீடு இழந்ததையும் பேசும்..
இந்த மூன்று யானைகள் வாழும் காடு
அவர்களை அணைத்ததையும் பேசும்…….
அத்தாவுல்லா
add a comment