தமிழகம்

நெகமம் பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் பணம் இருந்தால் மட்டுமே பத்திர பதிவு

47views
கோவை மாவட்டம் நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக கலாவதி என்பவர் பணியாற்றி வருகிறார் .  இந்த அலுவலகத்தில் தினந்தோறும் கடன் பத்திரம், கிரைய பத்திரம் ,பவர் அக்ரிமெண்ட், திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்கள் எடுக்க போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளன.  பொதுமக்கள் நேரடியாக சென்று எந்த வேலையும் நடைபெறுவதில்லை,மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் நெகமம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டராக வெளி நபர் பணி செய்து வருகிறார்.  லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்கள், பத்திரம் இல்லாமல் கிரயம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
பெருமளவில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபு என்ற புரோக்கர் மூலமாக அனைத்து பத்திர பதிவு வேலை மதிப்புக்கு தகுந்தபடி தகுந்தபடி ரூ.10 ஆயிரம் முதல் லட்சத்திற்கு மேல் இவர் மூலமாக லஞ்சமாக பெறப்பட்டு வருகிறது. புரோக்கர் வீட்டிற்கு தினமும் எடுத்துச் செல்கிறார் பதிவாளர் கலாவதி பணி முடிந்து செல்லும்போது புரோக்கர் வீட்டுக்கு சென்று சென்று பணத்தை பெற்றுக் கொள்கிறார். இதுவரை வாங்கிய லஞ்ச பணத்தில் பொள்ளாச்சி, கேரளா போன்ற பகுதிகளில் சொகுசு பங்களா, தோட்டம் காலியிடம் போன்றவை வாங்கி குவித்துள்ளார். சொத்துக்களை தங்களது மருமகன் பெயரிலும் ,சம்பந்தி பெயரிலும் லஞ்சப் பணத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கியுள்ளதாக பொதுமக்கள் புகாராக உள்ளது.

தங்க நாணயம் மற்றும் தங்க நகையும் பெரும் அளவு வாங்கி உள்ளார். இவர் பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் பினாமி பேரில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகளும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும். நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று இவர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை மறு ஆய்வுகள் மேற்கொண்டால் கண்டிப்பாக ஜெயிலுக்கு போவது உறுதியாய் விடுகிறது. இவருக்கு உறுதுணையாகும், பாதுகாப்பாகவும் கோவை தெற்கு மாவட்ட பதிவாளர் ராஜா என்பவருக்கு மற்றும் மேலதிகாரிகளுக்கு வாங்கும் லஞ்சப் பணத்தில் மாதம் மாதம் பங்கு செல்வதால் இவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டாக உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!