கட்டுரை

திராவிடர்களின் தன்னலமில்லாத உழைப்பால் தமிழர்கள் நன்றாக கைதட்ட பழகிக் கொண்டோம்?!.. தமிழர்கள் யாருமே இடம்பெறாத இடத்திலும் நாம் அப்படி இருக்கலாமா?

218views
நம் இளைஞர்களின் விளையாட்டு நுழைவும் பெயர் பெறலும் கூட இன்று காணாமல் போய்விட்டது. இதனை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.
உலக மக்கள் எங்காவது ஏதாவது ஒரு இடத்தில் அறியாமையில் இருப்பது வாடிக்கைதான். ஆனால் தமிழர் நாமோ.. எல்லா இடத்திலேயும் அப்படி ஏதாவது ஒரு அறிமையை என்பதை விட்டு, எல்லாவற்றிலுமே அப்படித்தான்.
நாம் மாற்றான் சொல்வதை தப்பென சொன்னால்.. அதனால் அவன் நம்மை அறிவில்லதவன் என நினைத்துக் கொள்வானோ.. என்கின்ற ஒரு அப்பாவித்தனத்தால் நாம் நம் பெயரைச் சொல்லவே மறந்துவிட்டோம்.
மானம் என்பது எல்லாவற்றிலும் தன் பங்கினை தன்கைவசமே வைத்திருப்பது. எல்லாவற்றையும் பிறரிடம் விட்டுவிட்டு கைதட்டுவதல்ல.. நமக்கு உழைப்பதாக.. பிறர் சொல்லக் கூடாது. நாம் நம்பிக்கையை நம் கைவசமே வைத்திருக்க வேண்டும்!
அதனால் ஒன்றா? இரண்டா? என்றால்.. இல்லை.. இல்லை அனைத்திலுமே என்றாகிப்போனது. அதனால் எந்தத் துறையிலாவது தமிழர்கள் இருக்கின்றார்களா? அல்லது இனிமேலாவது இருப்பார்களா? என்பதே நாம் நம் சிந்தனைக்கு வைக்கின்ற கேள்வி.
ஒரு காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் உலக அளவில் நடந்தால்.. அதில் ஆடும் விளையாட்டு வீரர்களில் தமிழ்நாட்டு வீரர்கள் ஏதாவது ஒரு இடத்திலாவது பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டு அணிகளிலேயே தமிழர்கள் இல்லை என்பதாகிவிட.. சென்னை அணி ஆடினால் வென்றால்.. நாம் நன்றாக அதையெல்லாம் மறந்து நன்றாக கைதட்டுகிறோம்.
இப்பொழுது ஆத்திரேலியாவில் நடந்து முடிந்துள்ள டி20 உலக மட்டைப்பந்தாட்ட போட்டியை காண நேர்ந்த போது நம் கண்கள் ஆட்டத்தின் உள்ளே செல்ல மறுத்து விட்டன. செவிகொடுத்து கேட்க ஒரு தமிழ்நாட்டு வீரரின் பங்களிப்பும் இல்லாமல் வெறுமனே இருந்தது. எவ்வளவு பெரிய பாராட்டை பெற்ற இடத்தில் ஒரு தமிழ்நாட்டு வீரரும் இல்லாதது நமக்கு பெரும் ஆதங்கம். தலைகுனிவு. அப்போட்டியில் விளையாடி வரும் பல தமிழ் இளைஞர்கள் இப்படி இடம் பெறாமல் போனது ஏன்?தமிழ்நாட்டின் பங்கெடுத்து என்னவானது?
கபடி என்கின்ற சடுகுடு, கால்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டம் என எதுஎதுவெல்லாமோ.. நடக்கும் பெயர் மட்டும் நமதாக இருக்கும். ஆனால் தலைமை ஏற்றிருந்தார் உட்பட தமிழ்நாட்டு வீரர்களாக ஓரிருவர்களாக இருக்கலாம்.. இல்லாமலும் போகலாம். ஆனால் அணியின் பெயர்கள் நமதாக இருக்கும். நாம் அதற்காக விசிலடிப்போம்?!
ஒரு காலத்திற்கு முன்பு வரையில் உலக அளவில் நடக்கும் எந்த விளையாட்டானாலும் தமிழ் நாட்டினர் இல்லாமல் நடக்காது என்ற நிலமை. அது குத்துச்சண்டை உட்பட. சதுரங்கம் என்றால் அது தமிழ் நாட்டின் விசுவநாதன் ஆனந்த் டென்னிசு என்றால் அமிர்தராசு சகோதரர்கள், மட்டைப்பந்தாட்டம் என்றால் விசுவநாத், சிறீகாந்த் இப்படியொரு தொடர்போல பலர்.
ஆனால் இன்று? மைசூர் போண்டாவிற்குள் மைசூர் இல்லை என்ற கேலி பேச்சு போல தமிழர் என்பார் தரை தட்டிய கப்பலானது. எல்லாவற்றையும் முற்போக்கும் பிற்போக்குமாய் வழிபோக்குத் தனமாய் போய் ஒழிந்தது. சாதியை ஒளிக்கின்றேன் எனக் கிளம்பியவர்களல் தமிழினத்தின் சாதனைகளையும் மறந்தே விட்டோம். தமிழர்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று குதித்து ‘கோல்’ என்னும் வலையில் விழுந்த பந்துகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் கால்பட.. கைப்பட தவமாகி இருக்கின்றது இன்று.
நம் வளர் தலைமுறைகளுக்கு எல்லா முன்னேற்றமும் வந்தடைய சென்னையில் சிதம்பரம் (செட்டியார்) விளையாட்டரங்கம் எனவும் பெங்களூரில் சின்னசாமி முதலியார் அரங்கமும் இன்னமும் நம்மவர்களின் முன்னேறிய தொண்டினை பல ஊர்களிலும் பறைசாற்றி நிற்க.. அவர்களை போன்றோர் பலரையும் சாதிக்குள் அடைப்போரை கைதட்டி வேடிக்கை பார்க்கிறது தமிழரின் உணர்வு. ஆனால், மக்களுக்கென தான் சம்பாதித்த எந்த ஒரு காசையும் மக்களுக்கென செலவிடாதவர்களின் நிழலில் நின்று நாம் குதிக்கின்றோம். கைத்தட்டி ஆரவாரம் செய்ய.‌. தமிழர் உயர்வுகள் பாழ்பட்டு போய்விட்டனவே..
தமிழர்கள் வீரத்தை பாராட்டலாம். பிறரின் அறிவுத் திறமைகளைகூட பாராட்டலாம். ஆனால் தன்னவர்கள் இடம்பெற வேண்டிய இடங்களில் எல்லாம் அப்படி யாரும் இடம்பெறவில்லையே.. என்ற கவலை கூட இல்லாமலா போவது? இதனை மக்களும் அரசும் ஆட்சிகளும் நினைவில் கொள்ளாமலா நடப்பது?அவை கைவிட்டுப் போனதை அறிந்த பின்னாலுமா?.. தமிழர் உணரத் தெளியாமல் இருப்பது?.
பாவலர் மு இராமச்சந்திரன்,  தலைவர் தமிழர் தன்னுரிமை கட்சி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!