உலகம்

மகிழ்ச்சியான சந்திப்பு…

67views
கொழும்பு : ஜூன்30
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பி.எச். அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு இவரை அழைத்தன.
சமீப காலமாக அப்துல் ஹமீது பெரிதாக நிகழ்ச்சிகளில் ஏதும் கலந்துகொள்ளாமல் கொஞ்ச நாள்கள் ஓய்விலிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அப்துல் ஹமீது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்ற செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவே வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கிவிட்டன. இந்த வதந்தி தீயாய் பரவ அப்துல் ஹமீது ரசிகர்கள், நண்பர்கள் பலரும் வருத்தத்துடன் இது குறித்து விசாரிக்க அப்துல் ஹமீதிற்கு போன் செய்துள்ளனர். போனை எடுத்துப் பேசிய அப்துல் ஹமீது, தன்னைப் பற்றிப் பரவிய வதந்தி அறிந்து மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இலங்கை சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் , மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, திருச்சி மணிச்சடர் ஊடகவியலாளர் சாகுல் ஹமீது, மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் நயினார் முகம்மது கடாபி ஆகியோர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இன்று (30/06/24) சந்தித்து நலம் விசாரித்தனர்.

இன்முகத்துடன் வரவேற்ற அப்துல் ஹமீது அவர்கள் உற்சாகத்துடன் எங்களின் இலங்கை பயணம் குறித்து கேட்டு அறிந்து வரலாற்று தகவல்களை அவரின் கணீர் குரலில் கிழக்கு மாகாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். சுமார் ஒருமணி நேரம் நீண்ட சந்திப்பில் தவறான செய்திகள் குறித்து ஆராய்ந்து பார்க்காமல் ஊடக அறம் என்பது இல்லாமல் போனது குறித்து மிகுந்த வருத்தம் அடைந்தார். புகைப்படம் எடுக்கும் போது அவருடைய நகைச்சுவை பாணியில் பேசி மகிழ்ச்சி உடன் வழியனுப்பி வைத்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் பூரண உடல் ஆரோக்கியத்தை வழங்கிடவும், மீண்டும் பல்வேறு நாட்டிற்கு சென்று தமிழ் மொழி உணர்வை வளர்த்திட துஆ செய்திடுவோம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!